கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட 1062 வது நீர் சுத்திகரிப்பு நிலையம் ஊருமலை கிறிஸ்தவ தேவாலயத்தில் திறந்து வைக்கப்பட்டது

இலங்கை கடற்படையின் சமூக நலத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 1062 வது நீர் சுத்திகரிப்பு நிலையம் 2024 டிசம்பர் 11 ஆம் திகதி வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமாரவின் தலைமையில் தலைமன்னார் ஊருமலை புனித லோரன்ஸ் கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுவது கடற்படை சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பாரிய அளவிலான சமூக பணியாகும். சுகாதார அமைச்சகத்தின் தலைமையில் மற்றும் Lion Nation Foundation (Guarantee) Limited நிருவனத்தின் நிதி பங்களிப்புடன் இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம், ஊறுமலை, தலைமன்னார் புனித லாரன்ஸ் கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் நிறுவப்பட்டன.

அதன்படி, தேவாலயத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் கிராம மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் எளிதாக பூர்த்தி செய்யும்.

மேலும், இந்த நிகழ்வுக்காக தேவாலயத்தின் பாதிரியார், வட மத்திய கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள், மாலுமிகள் உட்பட பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.