ரியர் அட்மிரல் ஹசந்த தசநாயக்க கடற்படை பொது பொறியியல் பணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்
ரியர் அட்மிரல் ஹசந்த தசநாயக கடற்படையின் பொது பொறியியல் இயக்குனராக இன்று (2025 ஜனவரி 23) கடற்படை தலைமையகத்தின் பொது பொறியியல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பொது பொறியியல் இயக்குனராக பொறுப்பேற்கும் முன், ரியர் அட்மிரல் ஹசந்த தசநாயக கடற்படை மரைன் பொறியியல் இயக்குனராக கடமையாற்றினார்.
அதற்கமைய, பொது பொறியியல் இயக்குனராக பணியாற்றிய ரியர் அட்மிரல் சிந்தக ராஜபக்க்ஷ, புதிதாக பொது பொறியியல் இயக்குனராக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் ஹசந்த தசநாயக அவர்களுக்கு தனது பதவியையும், கடமைகளையும் கடற்படை தலைமையகத்தின் பொது பொறியியல் அலுவலகத்தில் வைத்து ஒப்படைத்தார்.