கடற்படைத் தளபதி இராமஞ்ஞ மஹா நிக்காயவின் மஹாநாயக தேரரை சந்தித்து, கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஆசீர்வாதம் பெற்றார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காண்சன பானகொட, இன்று (2025 ஜனவரி 26) மீரிகம, மினிஒலுவ ஶ்ரீ வித்தியாவாச பிரவெண மஹா விஹாரஸ்தானத்தில், இலங்கை இராமஞ்ஞ மஹா நிகாயையின் மகாநாயக்கர், அக்கமஹா பண்டித அத்திபூஜ்ய மகுலேவெ ஶ்ரீ விமல நாயக்கரை வணங்கி, கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஆசீர்வாதம் பெற்றார்.

இந்த நிகழ்வின் போது மஹாநாயக்கர் அவர்கள், கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்பதற்காக அறிவுரை வழங்கி, கடற்படைத் தளபதி உள்பட முழு கடற்படைக்கும் ஆசீர்வாதம் செய்தார்.

மேலும், இந்த நிகழ்வில் கடற்படை சேவை வனிதா பிரிவின் தலைவியான அனுஷா பானகொட, பொது நிர்வாக இயக்குனர் சுகாதார சேவைகள் மற்றும் கடற்படை பௌத்த சங்கத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ஜானக மாரம்பே மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சந்திம சில்வா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.