நிகழ்வு-செய்தி
கடற்படைத் தளபதி இராமஞ்ஞ மஹா நிக்காயவின் மஹாநாயக தேரரை சந்தித்து, கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஆசீர்வாதம் பெற்றார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காண்சன பானகொட, இன்று (2025 ஜனவரி 26) மீரிகம, மினிஒலுவ ஶ்ரீ வித்தியாவாச பிரவெண மஹா விஹாரஸ்தானத்தில், இலங்கை இராமஞ்ஞ மஹா நிகாயையின் மகாநாயக்கர், அக்கமஹா பண்டித அத்திபூஜ்ய மகுலேவெ ஶ்ரீ விமல நாயக்கரை வணங்கி, கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஆசீர்வாதம் பெற்றார்.
26 Jan 2025
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீன்பிடி படகுகள் மன்னார் வடக்கு கடற்பரப்பில் கைது
இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து 2025 ஜனவரி 25 இரவு மற்றும் இன்று காலை (2025 ஜனவரி 26) மன்னாருக்கு வடக்கே இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில் சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட (34) இந்திய மீனவர்கள், (03) இந்திய மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.
26 Jan 2025


