கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியின், வருடாந்த இதழான ‘THE PORTHOLE’ வெளியீடு

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியினால் வெளியிடப்படும் வருடாந்த தொழில்முறை வெளியீடான 'The Porthole' இன் மூன்றாவது இதழ் கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியின் தளபதி ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப் அவர்களால் வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவிடம் இன்று (2025 ஜனவரி 27,) கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியால் 2022 இல் தொடங்கப்பட்ட, 'The Porthole' தொகுப்பு பல்வேறு துறைகளில் கடற்படை வீரர்கள் மேற்கொண்ட சோதனை ஆய்வறிக்கைகளை வெளிப்படுத்தவும் மற்றும் கடற்படை வீரர்களின் கல்வி எழுதும் திறனை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, 'The Porthole' தொகுப்பின் மூன்றாவது இதழ்; பயிற்றுனர்கள், மாணவ அதிகாரிகள், பயிற்சி அதிகாரிகள், கடற்படை பயிற்றுனர்கள் மற்றும் பயிற்சி மாலுமிகள் எழுதிய அறிவார்ந்த கட்டுரைகளின் விரிவான தொகுப்பைக் கொண்டுள்ளது.