பாக்கிஸ்தான் கடற்படை அகாடமியில் மிகச் சிறந்த மத்திய அதிகாரிக்கான விருதைப் பெற்ற மத்திய அதிகாரி டிஎம்ஐவி தென்னகோன், பிரதி பாதுகாப்பு அமைச்சரிடமிருந்து விசேட பாராட்டுக்களைப் பெற்றார்.

பாகிஸ்தான் கடற்படை அகாடமியில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, மிகச்சிறந்த மத்திய அதிகாரிக்கான வாள் விருதை பெற்ற, மத்திய அதிகாரி டிஎம்ஐவி தென்னகோன், இன்று (2025 ஜனவரி 27,) கௌரவ பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட அவர்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தார்.

இலங்கை கடற்படையின் 64வது கெடட் ஆட்சேர்ப்புக்கு இணைக்கப்பட்டு, பாகிஸ்தானின் கரச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படை அகாடமியில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, மிகச்சிறந்த மத்திய அதிகாரிக்கான வாள் விருதை பெற்றதற்காக, மாண்புமிகு பாதுகாப்பு பிரதியமைச்சர் அவர்களினால் அங்கு மத்திய அதிகாரி டிஎம்ஐவி தென்னகோனின் திறமையை பாராட்டி, தாய்நாட்டிற்கு அவர் பெற்றுத் தந்த புகழை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

மேலும், கடற்படையின் பயிற்சிப் பணிப்பாளர் ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தனவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்