போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்புத் திட்டத்தின் தலைவி மற்றும் கடற்படை தளபதி இடையே உத்தியோகபூர்வ சந்திப்பு
ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் தலைவி திருமதி Siri Bjune (Head of Global Maritime Crime programme of United Nations Office on Drugs & Crime) உட்பட ஒரு குழு உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இன்று (2025 ஜனவரி 27) கடற்படைத் தலைமையகத்தில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவை சந்தித்தனர்.
இச்சந்திப்பில், கடற்படைத் தளபதி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் தலைவருக்கும் இடையில், இலங்கையின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் பயிற்சித் திட்டங்கள் உட்பட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்புத் திட்டத்தின் தலைவருக்குமிடையில், கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தால் போதைப்பொருள், குற்றம், ஊழல் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து உலகைப் பாதுகாப்பதற்கும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை நிறுவுவதற்கும் பங்களிப்பதுடன், அதன் கீழ், உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்புத் திட்டம் உறுப்பு நாடுகளின் கடல் பகுதியில் நிகழும் கடல்சார் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கும், சட்ட அமுலாக்க திறனை வளர்ப்பதற்கும் பயிற்சித் திட்டங்களை நடத்தப்படுகின்றன.
மேலும், இந்தப் பயிற்சித் திட்டத்தின் கீழ், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கடல்சார் சட்ட அமுலாக்க முகவர்களுக்கான (Visit Board Search & Seize – VBSS) கப்பல்களை பரிசோதித்தல் மற்றும் கைப்பற்றும் முறைகள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் திருகோணமலை கடற்படை சிறப்புக் கப்பல் படைத் தலைமையகத்தில் நடத்தப்பட்டதுடன், இதுவரையில் 2016 ஆம் ஆண்டு முதல் ஐம்பது 50 பயிற்சி பாடநெறிகளை கடற்படையினரால் வெற்றிகரமாக நடாத்தப்பட்டுள்ளது.