இலங்கையின் மாலைதீவு குடியரசின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்தித்தார்
இலங்கையில் உள்ள மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானி கார்யாலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்ணல் ஹசன் அமீர் (Hassan Amir) இன்று (2025 ஜனவரி 31) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவை கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், 26 ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்ற வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த பின்னர், இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானி கார்யாலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், கடல் பாதுகாப்புக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, பாதுகாப்பு பற்றி இருதரப்பின் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.