இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் கடற்படை தளபதியை சந்தித்தார்
இலங்கைக்கான தென் கொரியாவின் தூதுவர் திருமதி மியோன் லீ (Miyon LEE), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை 2025 பெப்ரவரி 03 அன்று கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், 26ஆவது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவுக்கு இலங்கைக்கான தென் கொரியத் தூதுவர் திருமதி மியோன் லீ (Miyon LEE), தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததன் பின்னர், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.