பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான 'PNS ASLAT' என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இலங்கையை விட்டு புறப்பட்டது
2025 பெப்ரவரி 01 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் கடற்படையின் 'PNS ASLAT’ போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று (2025 பெப்ரவரி 04,) இலங்கையை விட்டு வெளியேறியதுடன், கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.
கப்பல் இலங்கையில் தங்கியிருந்த காலத்தில், அதன் கட்டளை அதிகாரியான கெப்டன் MUHAMMAD AZHAR AKRAM மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சந்திம சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றதுடன், மேலும் கொழும்புத் துறைமுகத்தின் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவதற்காகவும் சுற்றுப்பயணத்தில் இணைந்தனர்.
மேலும், கப்பலின் செயல்பாட்டு செயல்திறன் குறித்து இலங்கை கடற்படை வீரர்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சியும் கப்பலில் நடைபெற்றது.