பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கடற்படை தலைமையகத்தில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்
பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) 2025 பெப்ரவரி 10 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் முதல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களால் கடற்படையின் பாரம்பரிய முறைப்படி கடற்படை தலைமையகத்திற்கு வரவேற்கும் நிகழ்வு இடம் பெற்றது.
அதன்படி. இராணுவ மரபுகளுக்கு இணங்க, விசேட மரியாதையளித்து பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு வணக்கங்களை தெரிவித்த பின்னர், வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட அவர்களால் கடற்படைத் தலைமை அதிகாரி உட்பட கடற்படை முகாமைத்துவ சபையை அவருக்கு அறிமுகப்படுத்தினார். கௌரவ பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்கள் கடற்படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்த விஜயத்தின் போது கடற்படைத் தளபதி மற்றும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சருக்கு இடையில் இடம்பெற்ற சுமூகமான சந்திப்பின் பின்னர், கடற்படை தளபதி நினைவுப் பரிசில்களை வழங்கினார்.
பின்னர், கடற்படை இயக்குநர் ஜெனரல் செயற்பாடு அவர்கள், கடற்படையின் அமைப்பு, எதிர்கால திட்டங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து விளக்கமளித்தார். அங்கு உரையாற்றிய பிரதி பாதுகாப்பு அமைச்சர் அவர்கள், சமுத்திரத்தில் இடம்பெறும் அனைத்து சட்டவிரோத செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தும் வகையில் பரந்த கடற்பரப்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலையான கடல் பிராந்தியத்தை பேணுவதில் இலங்கை கடற்படையினரின் பங்களிப்பை பாராட்டினார். மேலும் உரையாற்றிய அவர், தீவு நாடான இலங்கையின் தேசிய பாதுகாப்பிலும், ஒரு தீவு நாடாக இலங்கையின் சர்வதேச கடமைகளை நிறைவேற்றுவதற்கும், கடல்சார் நிலையான கடல் பிராந்தியத்தை பேணுவதற்கான தேசிய கடல்சார் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், தற்போதைய கடல்சார் சவால்களுக்கு வெற்றிகரமாக பதிலளிப்பதற்கும், இலங்கை கடற்படையின் செயற்பாட்டுத் தயார்நிலையையும் வினைத்திறனையும் உயர் மட்டத்தில் தொடர்ந்து பேணுவதன் முக்கியத்துவத்தினை கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகளின் முன்னிலையில் உரையாற்றினார்.
அங்கு உரையாற்றிய பிரதி பாதுகாப்பு அமைச்சர் அவர்கள், கடற்படையானது ஆளணித் திறன், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை திறன்மிக்க பணியாளர்களைக் கொண்ட இராணுவம் எனவும், கடற்பரப்பில் சகல சட்ட விரோதச் செயற்பாடுகளையும் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, கடல் பிராந்தியத்தை நிலையானதாக பேணுவதில் இலங்கை கடற்படையினரின் பங்களிப்பு பாராட்டத்தக்கது எனவும் தெரிவித்தார்.
க்லீன் ஶ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து வலியுறுத்திய பிரதி பாதுகாப்பு அமைச்சர், கடற்படை என்பது தனிப்பட்ட திறன்கள், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை திறன்மிக்க பணியாளர்களைக் கொண்ட ஒரு இராணுவம் என்றும், நாட்டின் அபிவிருத்தி மற்றும் தேசிய செயத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் வலியுறுத்தினார்.
இலங்கை கடற்படையானது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட கடற்படையாக தனது நிபுணத்துவத்தை மேலும் வளர்த்துக்கொள்வதுடன், திறன்கள், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை திறன்மிக்க பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் புதிய அறிவு மற்றும் திறன்களுடன் பரிபூரணமாக வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் உறுதியுடன் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
உரையின் இறுதியில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் விரிவுரையில் பங்குபற்றிய கடற்படை வீரர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுடன் சிநேகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொண்டார்.