இந்தோனேசிய கடற்படைக் கப்பல் 'KRI BUNG TOMO - 357' நட்புரீதியான விஜயத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு இலங்கையை விட்டுப் புறப்பட்டது
2025 பெப்ரவரி 16 ஆம் திகதி நட்புரீதியான விஜயத்திற்காக இலங்கைக்கு வந்த இந்தோனேசிய கடற்படையின் 'KRI BUNG TOMO - 357' என்ற போர்க்கப்பல், விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, இன்று (2025 பெப்ரவரி 17) இலங்கையில் இருந்து புறப்பட்டதுடன், குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர் பாரம்பரிய கடற்படை முறைப்படி கப்பலிற்கு பிரியாவிடை அளித்தனர்.
மேலும், 'KRI BUNG TOMO - 357' என்ற கப்பல் இலங்கையில் தங்கியிருந்த காலத்தில், அதன் முழு கடற்படையினரும் கொழும்பு பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவதற்காக இணைந்தனர்.