சர்வதேச இராணுவ விளையாட்டு சபையின் நினைவு தின வீதி ஓட்டம் - 2025 ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் நடைபெற்றது
சர்வதேச இராணுவ விளையாட்டு சபை தினக் (Council International Military Sports-CISM) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தலைமையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்துவின் பங்குபற்றுதலுடன் சர்வதேச இராணுவ விளையாட்டு சபை தின கொண்டாட்ட வீதி ஓட்டம் - (2025 பெப்ரவரி 18) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பாராளுமன்ற மைதானத்தில் இருந்து அக்குரேகொட முப்படைத் தலைமையகம் வரை நடைபெற்றது.
விளையாட்டு மூலம் நட்பு' என்ற குறிக்கோளுடன் 1948 பெப்ரவரி 18, ஆம் திகதி தொடங்கிய சர்வதேச இராணுவ விளையாட்டு சபை (CISM) உலகின் மிகப்பெரிய பலதரப்பு அமைப்புகளில் ஒன்றாவதுடன், இது 140 உறுப்பு நாடுகளின் ஆயுதப்படைகளுக்கு பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறது மற்றும் இது உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உலகளாவிய விளையாட்டு அமைப்பாகும்.
இவ்வருடம் இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச இராணுவ விளையாட்டு சபையின் நினைவு தின வீதி ஓட்டம் பாராளுமன்ற மைதானத்திற்கு அருகில் ஆரம்பமாகி 02 கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரத்தை கடந்து புதிய விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள முப்படைகளின் தலைமையகத்தின் இராணுவ தலைமையகத்திற்கு அருகில் நிறைவடைந்தது.
மேலும், இந்நிகழ்வில் கலந்து கொண்ட முப்படைகளின் தளபதிகளின் பங்களிப்புடன் முப்படை வீரர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் அங்கு இடம்பெற்றதுடன், அங்கு முப்படைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் அங்கவீனமுற்ற போர்வீரர்கள் குழு மற்றும் ஏனைய அணிகளின் குழுவும் கலந்துகொண்டனர்.