பாகிஸ்தான் கடற் கூட்டமைப்பு ‍கல்லூரியின் 54வது பணியாளர் பாடநெறியில் பயிலும் அதிகாரிகள் குழு ஒன்று ஆய்வுப் பயணத்திற்காக கடற்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்தனர்

2025 பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை இலங்கைக்கு ஆய்வு விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற் கூட்டமைப்பு ‍கல்லூரியின் 54 ஆவது பணியாளர் பாடநெறியை பயிலும் 18 மாணவர் அதிகாரிகள் மற்றும் மூன்று (02) கல்வி ஊழியர்களைக் கொண்ட கொமடோர் Ahsen Ali Khan தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று (2025 பெப்ரவரி 19) கடற்படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்ததுடன், அங்கு கொமடோர் Ahsen Ali Khan மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதியை சந்தித்தனர்.

இதன்படி, இந்த அதிகாரிகள் குழுவினால் கடற்படை தலைமையகத்தில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவைச் சந்தித்து சிநேகபூர்வ சந்திப்பை மேற்கொண்டதன் பின்னர், இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

மேலும், பாக்கிஸ்தான் கடற் கூட்டமைப்பு ‍கல்லூரியின் 54 வது பணியாளர் பாடநெறியில் கலந்துகொள்ளும் அதிகாரிகள் இலங்கை கடற்படையின் பங்கு பற்றிய விளக்கக்காட்சியில் கலந்துகொண்டதுடன், கடற்படை தலைமையகத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் புத்திக லியனககே, பயிற்சி பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.