"சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற கடற்படையின் சமூக பராமரிப்பு வேலைத் திட்டம்
“க்லீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்துடன் இணைந்து "சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு, மேல் மற்றும் வட மத்திய ஆகிய கடற்படை கட்டளைகளினால் கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தின் மூலம் 2025 பெப்ரவரி 22 மற்றும் 23 ஆகிய திகதிகளும் கடற்படையின் சமூக பராமரிப்பு வேலைத் திட்டமொன்றை வழங்க கடற்படை ஏற்பாடு செய்தது.
அதன்படி, இந்த சமூக பராமரிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் 2025 பெப்ரவரி 22ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளையின் மூலம் காலிகொடுபவுர அன்மித்த கடற்கரை, கொடவாய மீனவ துறை முகத்தை அன்மித்த கடற்கரை மற்றும் தொடம்துவ கடற்கரை முதல் ரஜ்கம வரை கடற்கரையில் சிதறிக் கிடந்த பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட திடக்கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் அதனை முறையாக அகற்றுவதற்கு ஏற்பாடு செய்தது.
2025 பெப்ரவரி 23 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளையின் மூலம் காங்கேசன்துறை, பருத்தித் துறை முதல் சன்கோட்டை வரை, மாதகல்துறை முதல் குசுமன்துறை, நிரவாடு முதல் சவுக்காடி வரை, கோவிலன், சாடி,படிதிரிப்பு, கிலாலி, வினையாசோடி முதல் கே பொயின்ட் வரை, மானல்அடி, மணல்காடு, கரையோரம், முல்லிக்குளம், ஹுனய்ஸ் நகர் முதல் கரதக்குலிய, கல்ஆறு, துடாவ, ஆனவாசல், கலாஓய, தியபென்னும, புத்தளம் அன்னித்த தீவு மற்றும் வட மத்திய கட்டளை மூலம் ஊருமலை, பலைய பாலம், பியரகம, கீரி, தால்பாடு, பேசாலை, வங்காலை வலைப்பாடு மற்றும் இலுப்புக்கடவாய் ஆகிய கடற்கரையை சுத்தம் செய்து, குறித்த கடற்கரையில் சிதறிக் கிடந்த பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட திடக்கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் அதனை முறையாக அகற்றுவதற்கு ஏற்பாடு செய்தது.
மேலும், இந்த சமூக பராமரிப்பு வேலைத் திட்டத்தின் மூலம் அரச நிறுவனம், இராணுவப் படை, பொலிஸ் திணைக்களம் மற்றும் பொது மக்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.