கடற்படை படகு உற்பத்தி முற்றத்தில் தயாரிக்கப்பட்ட 60 படகுகள் மற்றும் காயக் படகுகள் விளையாட்டுக் கழகங்களுக்கு வழங்கப்பட்டது

சர்வதேச படகுகள் மற்றும் காயக் படகுகள் கூட்டமைப்பில் (International Canoe Federation - IFC) அனுசரணை வழங்கப்பட்ட இலங்கை தேசிய படகுகள் மற்றும் காயக் படகுகள் சங்கத்தால் (National Association for Canoeing and Kayaking in Sri Lanka – NACKSL) ஆரம்பத்தில், வெலிசறை கடற்படை படகுகள் கட்டும் தளத்தில் (NBBY) தீவின் புகழ்பெற்ற விளையாட்டுக் கழகங்களுக்கு தயாரிக்கப்பட்ட அறுபது (60) படகுகள் மற்றும் காயக் படகுகளை ஒப்படைத்தல், 2025 மார்ச் 17 அன்று வெலிசறை கடற்படை படகுத் தளத்தில்,கடற்படை தளபதியின் தலைமையில் நடைபெற்றது.

அதன்படி, கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புகளுடன் உயர் தரத்தினால், தயாரிக்கப்பட்ட முப்பது (30) படகுகள் மற்றும் முப்பது (30) காயக் படகுகள், தீவின் புகழ்பெற்ற நீர் விளையாட்டு கழகங்களுக்கு வழங்கப்பட்டன, அதாவது; இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை Bolgoda Lake rowing club, Lanka Adventure, Adventure SEAL, North wing project in Jaffna, Diyawanna Water sports club ஆகிய விளையாட்டுக் கழகங்களினாலும், கொத்தலாவல பாதுகாப்பு அறிவியல் பீடம், திருகோணமலையில் உள்ள கடற்படை மற்றும் கடல்சார் அறிவியல் பீடம் மற்றும் தீவின் பல்வேறு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாடசாலை விளையாட்டுக் கழகங்களுக்குப் பொருட்களை விநியோகிப்பதன் மூலம் இது செய்யப்பட்டது.