கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் தொழிலாளர் பங்களிப்புடன் வாஹல்கட D2 கல்லூரி புனரமைக்கப்பட்டது

“ “க்லீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்துடன் இணைந்து பாடசாலை வளாகங்களை சுத்தப்படுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் பழுதுபார்த்தல் ஆகிய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், அனுராதபுர மாவட்டத்தில் உள்ள வாஹல்கட D2 கல்லூரியை சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபார்த்தல் கடற்படையின் சமூக நல பங்களிப்புடன் இன்று (2025 பெப்ரவரி 22) இடம்பெற்றது.

"சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், இலங்கையை சமூக, சூழல் மற்றும் ஆன்மீக ரீதியில் மாற்றியமைக்கும் “க்லீன் ஶ்ரீ லங்கா" தேசியத் திட்டத்தின் முக்கிய பங்காளியாக இலங்கை கடற்படை செயற்பட்டு வருகின்றது. “க்லீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் 1000 பாடசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்துடன், பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ், முப்படைகளின் தொழில்நுட்ப பங்களிப்புடன், நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 200 பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்களின் கீழ், வாஹல்கட D2 கல்லூரி வளாகம் சுத்தம் செய்யப்பட்டு, இலங்கை சிறுவர்களின் கல்விக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்காக வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ், அந்த கட்டளையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் தேவையான புனரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.