சிறப்பு படகுகள் படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த கடற்படை வீரர்களுக்கு கடற்படைத் தளபதியினால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன
இலங்கை சிறப்பு படகுகள் படைப்பிரிவின் 32வது ஆட்சேர்ப்புப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இரண்டு அதிகாரிகள் (02) மற்றும் முப்பத்தி நான்கு (34) மாலுமிகளுக்கு பதக்கங்கள் அணிவித்தல், அந்த படைப்பிரிவின் கட்டளைத் தளபதி, கமாண்டர் லக்மால் வீரக்கொடியின் அழைப்பின் பேரில், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் தலைமையில் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவ தலைவி திருமதி அனுஷா பனாகொட அவர்களின் பங்கேற்புடன், 2025 மார்ச் 22 அன்று திருகோணமலை, கடற்படைத் தளத்தில் உள்ள சிறப்புக் படகுகள் படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
சிறப்பு படகுகள் படைப்பிரிவின் பயிற்சிக்கு தானாக முன்வந்து 32வது ஆட்சேர்ப்பு பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த உறுப்பினர்களுக்கு சிறப்பு படகுகள் படைப்பிரிவின் சின்னங்களை அணிவித்தல் மற்றும் இந்த கடினமான பயிற்சியின் போது சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய கடற்படை வீரர்களுக்கு கடற்படை தளபதி வெற்றிக்கிண்ணங்களை வழங்கினார்.
இதன்படி, சகல பாடங்களிலும் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற பயிற்சி உறுப்பினருக்கான கமாண்டர் எஸ்.என்.கே. சில்வா நினைவுக் கிண்ணம் சப் லெப்டினன்ட் ஆர்.எம்.ஒய்.கே.ரத்நாயக்கவுக்கும், சிறந்த துப்பக்கிச் சூட்டாளருக்கான கமாண்டர் சி.டி. மார்ட்டின்ஸ்டீன் நினைவுக் கிண்ணம் கடற்படை வீர்ர் கே.எம்.எஸ்.ஆர் பிரேமலாலுக்கும், சிறந்த உடல் தகுதிக்கான லெப்டினன்ட் கமாண்டர் எஸ்.கே.டலுகம நினைவுக் கோப்பை கடற்படை வீர்ர் ஜே.டபிள்யூ.ஜி.எம்.பி.குமாரவுக்கும், சிறந்த விளையாட்டு வீரருக்கான கே.ஜி.ஷாந்தா நினைவுக் கிண்ணம் கடற்படை வீர்ர் ரன்சித்துக்கும், பாடநெறியின் சிறந்த நீச்சல் வீரருக்கான லெப்டினன்ட் கமாண்டர் பலிஹேன நினைவுக் கிண்ணம் கடற்படை வீர்ர் ஹேரத்துக்கும் பாடநெறியின் சிறந்த பயிற்சி உறுப்பினருக்கான லெப்டினன்ட் கொமடோர் எஸ்.டபிள்யூ. கால்லகே நினைவுச்சின்னத்தை சிறப்பு படகுகள் படைப்பிரிவின் லெப்டினன்ட் டபிள்யூ.எம்.தில்ஷானும் பெற்றுக்கொண்டார்.
பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த கடற்படை வீரர்களுக்கு உரையாற்றிய வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, முதலில் வாழ்த்து தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த கடற்படைத் தளபதி, 03 அதிகாரிகள் மற்றும் 38 மாலுமிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட விசேட படகுகள் படைப்பிரிவின் ஆரம்பம் முதல் பல்வேறு காலகட்டங்களில் தலைமை தாங்கிய தளபதிகள், அதிகாரிகள், மாலுமிகளின் தீவிர ஆர்வமும் அர்ப்பணிப்பும் இன்றைய நிலைக்கு அதன் படிப்படியான வளர்ச்சிக்கு தீர்க்கமான காரணியாக இருப்பதாகவும், சிறப்பு படகுகள் படைபிரிவின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் தாய்நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்ததுள்ளைவர்களை மரியாதையுடன் நினைவு கூறுவதாகவும் தெரிவித்தார்.
சவாலான காலகட்டத்தை கடந்து சரியான தொலைநோக்கு பார்வையுடன் நாடு முன்னேறி வரும் பின்னணியில், அதற்கு துணைபோகும் வகையில் பிரஜைகள் மத்தியில் விசேட பிரஜை என்ற வகையில் இராணுவத்தினருக்கு விசேட பொறுப்பு இருப்பதாக தெரிவித்த கடற்படை தளபதி, கலைந்து செல்லும் கடற்படையினர் தமது கடமையை முறையாக நிறைவேற்றி இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள குடிமைப் பொறுப்பை அதிகபட்ச ஆற்றலுடன் நிறைவேற்ற வேண்டுமென கடற்படைத் தளபதி தெரிவித்தார்.
மேலும், ஒரு விதிவிலக்கான கடற்படை நபராக, கடற்படையின் சிறப்புக் படகு படைப்பிரிவின் செயல்பாட்டுக் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள கலைந்து செல்லும் கடற்படை வீரர்கள், சிறப்புக் படகு படைப்பிரிவில் உள்ளார்ந்த உயர் தொழில்முறை திறன்களை மேலும் கூர்மைப்படுத்தி, பணிகளை நிறைவேற்ற உறுதியுடன் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். கடற்படை வீரர்களின் அன்பான பெற்றோர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார். அத்துடன், கலைந்து சென்ற 32ஆவது படையணியைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மாலுமிகளை வெற்றிகரமாகப் பயிற்றுவித்த சிறப்புக் படகு படைபிரிவின் தளபதி உள்ளிட்ட பயிற்சி ஆலோசனைக் குழுவிற்கும் கடற்படைத் தளபதி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
சிறப்பு படகுகள் படைப்பிரிவின் உறுப்பினர்கள், படைப்பிரிவின் வளாகத்திலும், நிக்கல்சன் கோவ் கடற்கரையிலும் திறன் பயிற்சிக் காட்சியில் தங்களின் சிறப்புப் பயிற்சி பெற்ற திறன்களை வெளிப்படுத்தினர். அந்தற்காக சிறப்பு படகுகள் படையின் மறைந்திருந்து துப்பாக்கி சுடும் வீரர்கள், போர் சுழியோடிகள், VBSS குழுக்கள், நாய் படையைச் சேர்ந்த கடல்சார் சிறப்பு நடவடிக்கைகளுக்கு பயிற்சி பெற்ற போர் நாய் குழுக்கள், விசேட அதிரடி தற்காப்புக் கலைக் குழுக்கள், கரையோர நகர்ப்புறங்களில் செயற்படும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கமாண்டர் கமல் திஸ்ஸ குமார தலைமையிலான இலங்கை கடற்படை பெரசூட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரசூட் அணியினரும் கலந்துகொண்டனர்.
மேலும், கடற்படையின் பிரதிப் பிரதானி மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க மற்றும் கடற்படை தலைமையகம் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், இராணுவ மற்றும் விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் விருந்தினர்கள் மற்றும் கடற்படை வீரர்களின் பெற்றோர்கள் குழுவினரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.