ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்புத் திட்டத்தின் கீழ் கடற்படையால் நடத்தப்படும் பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திருகோணமலையில் நடைப்பெற்றது

போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத்தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கப்பல்களிற்குள் நுழைதல், தேடல் மற்றும் கைப்பற்றும் உத்திகள் தொடர்பான பிராந்திய ஆலோசனை பாடநெறி மற்றும் பிராந்திய கடல்சார் சட்ட அமலாக்க ஆலோசனைப் பாடநெறி ஆகியவை திருகோணமலை சிறப்புப் படகுகள் படைப்பிரிவில் சிறப்பாக நடைபெற்றதுடன். சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வினை 2025 மார்ச் 20 அன்று திருகோணமலை Sober Island Resort இல் நடத்த கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, இந்த பயிற்றுவிப்பாளர் பாடநெறியின் முதன்மை நோக்கமானது கடல்சார் சட்ட அமலாக்கத்தில் சர்வதேச அளவில் தகுதி வாய்ந்த பயிற்றுவிப்பாளர்களாக ஆவதற்கு பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி அளிப்பதாகும். அங்கு, கடலில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான அத்தியாவசிய உத்திகள் பற்றிய நடைமுறை மற்றும் தலைமைத்துவ அறிவு வழங்கப்பட்டது, மேலும் கதிரியக்க மற்றும் அணு அபாயங்கள் உள்ள பின்னணியில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. பிராந்திய கடல்சார் சட்ட அமலாக்க வழிகாட்டல் பயிற்சியில், இதுபோன்ற பேரிடர்களை வெற்றிகரமாக நிர்வகிப்பது குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

மேலும், இந்த பயிற்சியில் இலங்கை கடற்படை, இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம், இந்திய கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மாலைதீவு கடலோர பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்திய இருபத்தி ஏழு (27) கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின், ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு தொடர்பான அலுவலகம் மற்றும் இலங்கை அணுசக்தி திணைக்களம் ஆகியவற்றின் ஆலோசகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.