கூட்டு கடல்சார் படைகளின் 150 வது பணிக்குழுவின் கட்டளை அதிகாரி உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக கடற்படை தளபதியை சந்தித்தார்
கூட்டு கடல்சார் படைகளின் 150 வது பணிக்குழுவின் கட்டளை அதிகாரி, கொமடோ ரோஜர் வோட் (commodore Rodger ward) மற்றும் படையின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று 2025 மார்ச் 22 முதல் 26 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன், இதற்கு இணையாக, இந்தக் குழு இன்று (2025 மார்ச் 24) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தது.
உலகின் மிகப்பெரிய கடல்சார் கூட்டணியாகக் கருதப்படும் கூட்டு கடல்சார் படை, 46 நாடுகளின் கடற்படை கூட்டாண்மையாகும். மேலும் 2023 ஆம் ஆண்டில், இலங்கை அதன் 39 வது உறுப்பினராக கூட்டணியில் இணைந்தது. கூட்டு கடல்சார் படை, கடல்களின் பாதுகாப்பு ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்காக ஐந்து (05) பணிக்குழுக்களின் கீழ் செயல்படுகிறது. சர்வதேச விதிகள் அடிப்படையிலான உத்தரவின் (IRBO) பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. மேலும் இலங்கை கடற்படை 2025 ஆம் ஆண்டின் முதல் 06 மாதங்களுக்கு அதன் 154 வது பணிக்குழுவிற்கு தலைமை தாங்கும்.
மத்திய கிழக்கு வளைகுடா பிராந்தியத்திற்கு வெளியே கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை கூட்டு கடல்சார் படைகளின் 150வது பணிக்குழு மேற்கொள்வதுடன், அங்கு இந்தப் பணிக்குழு, குறித்த பிராந்தியத்தின் வழியாகப் பயணிக்கும் வணிகக் கப்பல்களின் சுதந்திரமான வழிசெலுத்தலை உறுதி செய்வதற்குப் பொறுப்பாகும். நியூசிலாந்து கடற்படை 2025 ஜனவரி 15 முதல் இந்தப் பணிக்குழுவின் தலைமைப் பொறுப்பை எற்கும்.
அதன்படி இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது கொமடோ ரோஜர் வோட்டும் கடற்படைத் தளபதியும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மேலும் இந் நிகழ்வை குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டனர்.
மேலும், கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக 150வது பணிக்குழுவின் தளபதி உட்பட கடற்படை தலைமையகத்தில் கடற்படை நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் அவர்களால் குழுவிற்கு விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், இந்த விஜயத்தின் போது இலங்கை கடலோர காவல்படைத் துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பின்னர், பணிக்குழு 150 இன் தளபதி உள்ளிட்ட தூதுக்குழு 2025 மார்ச் 26 அன்று தீவை விட்டுப் புறப்பட உள்ளனர்.