இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத்தின் பிரதானி கடற்படை தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத்தின் பிரதானி கமாண்டர் Sean Jin மற்றும் அந்த அலுவலகத்தின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ள லெப்டினன்ட் கமாண்டர் Ros Lary ஆகியோர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை 2025 மார்ச் 26 அன்று கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தனர்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், கமாண்டர் Sean Jin, இனால் தனது சேவைக் காலத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத்தின் பணிகளுக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவித்ததுடன், அந்த அலுவலகத்தின் தலைவராக பொறுப்பேற்கும் லெப்டினன்ட் கமாண்டர் Ros Lary யை கடற்படைத் தளபதிக்கு அறிமுகப்படுத்தி, இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து சிநேகபூர்வமாக கலந்துரையாடினர்.
மேலும், இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இந்நிகழ்வில் பங்குபற்றியதுடன், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.