வட மத்திய கடற்படை கட்டளையின் நலன்புரி வசதிகள் விரிவாக்கப்பட்டு நிர்மானிக்கப்பட்ட விடுமுறை விடுதி திறந்து வைக்கப்பட்டது

வடமத்திய கடற்படை கட்டளையின் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்தும் பொருட்டு, இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிறுவன வளாகத்தின் நிர்வாக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட கட்டிடம் புனரமைக்கப்பட்டு விடுமுறை விடுதியாக மாற்றப்பட்டு 2025 மார்ச் 21 அன்று வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை கடற்படைக் கப்பல் கஜபா நிறுவனத்தின் நிர்வாகப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் கட்டிடத்தை கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புகள் மற்றும் வளங்களைக் கொண்டு விடுமுறை விடுதியாக மாற்றுவதற்கான நிர்மாணப் பணிகள் 2025 மார்ச் 13 அன்று ஆரம்பிக்கப்பட்டன.

கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டலின் பேரில், வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ், கட்டளையின் சிவில் பொறியியல் துறையினால் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பின்னர் அதிகாரிகளின் நலனுக்காக திறந்து வைக்கப்பட்டது.