இலங்கை கடற்படையின் ஆமை பாதுகாப்பு திட்டத்தினால் 42 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

இலங்கை கடற்படையின் ஆமைப் பாதுகாப்புத் திட்டத்தினால் பாதுகாக்கப்பட்ட நாற்பத்திரண்டு (42) ஆமைக் குஞ்சுகள் 2025 மார்ச் 25 அன்று தென்கிழக்கு கடற்படைக் கட்டளையின் பானம கடற்கரையில் கடலில் விடப்பட்டன.

'க்லீன் ஶ்ரீ லங்கா' தேசிய திட்டத்தின் கீழ் இலங்கையின் சமூக, சூழலியல் மற்றும் நெறிமுறை ரீதியாக மறுசீரமைப்புக்காக ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் முக்கிய பங்குதாரராக உள்ள கடற்படை, இலங்கையின் பாதுகாப்புத் திட்டங்களுக்கு தொடர்ந்து பங்களித்து வருகிறது.

இதன்படி, அழிந்துவரும் உயிரினமாக கருதப்படும் ஆமைகளை பாதுகாப்பதற்காகவும், கடல்சார் சூழலின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கும் வகையிலும், இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிறுவனத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ஆமைகளின் முட்டைகளில் இருந்து பெறப்பட்ட நாற்பத்திரண்டு (42) ஆமை குஞ்சுகள் 2025 மார்ச் 23 கடலுக்கு விடப்பட்டன.