2024/25 கழகங்களுக்கு இடையேயான மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப்பை வென்ற கடற்படை மகளிர் ரக்பி அணியினர் கடற்படை தளபதியை சந்தித்தனர்
2024/25 கழகங்களுக்கு இடையேயான மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப்பை வென்ற கடற்படை மகளிர் ரக்பி அணியினர்,வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை 2025 மார்ச் 25 அன்று கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்து ரக்பி கோப்பையை கடற்படைத் தளபதி முன்னிலையில் முன்வைத்தனர். மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாவது தடவையாகவும் வெற்றியீட்டிய கடற்படை ரக்பி அணிக்கு கடற்படைத் தளபதி வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ச்சியான பயிற்சி, ஒழுக்கம் மற்றும் குழு உணர்வின் மூலம் இந்த மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப்பை வென்று கடற்படையின் நற்பெயரை உயர்த்தியதற்காக கடற்படைத் தளபதி கடற்படை மகளிர் ரக்பி அணிக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், எதிர்கால வெற்றிகளுக்குத் தேவையான பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் வசதிகளை மேலும் விரிவுபடுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
மேலும், கடற்படை ரக்பி அணியின் தலைவர் ரியர் அட்மிரல் சனத் பிடிகல, கடற்படை விளையாட்டுப் பணிப்பாளர் கொமடோர் மனோஜ் மும்முல்லகே மற்றும் கடற்படை மகளிர் ரக்பி அணியின் முகாமையாளர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன் இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில், வெற்றி பெற்ற மகளிர் ரக்பி அணியுடன் கடற்படைத் தளபதி குழு புகைப்படத்திலும் இணைந்து கொண்டார்.