நிகழ்வு-செய்தி

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான BUNGO (MST-464) மற்றும் ETAJIMA (MSO-306) என்ற கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான BUNGO மற்றும் ETAJIMA என்ற கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக இன்று (2025 ஏப்ரல் 01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

01 Apr 2025

கடற்படையினால் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்திற்கு ஆதரவு

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், திருகோணமலையில் 2025 மார்ச் 27 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் டெங்குக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு சமூக பணி பங்களிப்பை வழங்குவதற்கு இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

01 Apr 2025

மீனவ சமூகத்தை மிகவும் பாதுகாப்பானதாக்க கடற்படையின் முன்முயற்சியின் கீழ் தொடர்ச்சியான அடிப்படை வாழ்க்கை ஆதரவு பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன

இலங்கை கடற்படை, கடற்றொழில் திணைக்களத்துடன் இணைந்து மீனவ சமூகத்தினருக்கான அடிப்படை முதலுதவி மற்றும் அடிப்படை வாழ்க்கை உதவி (Basic Life Support - BLS) பயிற்சித் திட்டத்தை 2025 மார்ச் 26 முதல் 2025 மார்ச் 28 வரை திருகோணமலை கொட்பே மற்றும் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகங்களை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடாத்தினர். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீனவர்களுக்கு கடற்றொழில் திணைக்களம் மற்றும் கடற்படையினரால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

01 Apr 2025

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய கட்டளைத் தளபதியாக ரியர் அட்மிரல் ஜகத் குமார பொறுப்பேற்றுக் கொண்டார்

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் ஜகத் குமார 2025 டிசம்பர் 31 வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பதவியேற்றார்.

01 Apr 2025

முல்லைத்தீவு, சிறி சுப்பிரமணிய வித்தியாசாலையை "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலையாக" மாற்றுவதற்கு கடற்படையின் குடிமக்களை வலுவூட்டல் மற்றும் சமூக பணி பங்களிப்பு

"மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் முல்லைத்தீவு, சிறி சுப்பிரமணிய வித்தியாசாலை வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 மார்ச் 26 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

01 Apr 2025