மீனவ சமூகத்தை பாதுகாப்பானதாக்க கடற்படையின் அடிப்படை வாழ்க்கை ஆதரவு பயிற்சி நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது

இலங்கை கடற்படை, கடற்றொழில் திணைக்களத்துடன் இணைந்து மீனவ சமூகத்தினருக்கான அடிப்படை முதலுதவி மற்றும் அடிப்படை வாழ்க்கை உதவி (Basic Life Support - BLS) பயிற்சித் திட்டத்தை 2025 ஜூன் 27 ஆம் திகதி திருகோணமலை மூதூர் மீன்பிடி துறைமுகத்தை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

இதன்படி, கடற்படையின் சமூகப் பணித் திட்டமாக கிழக்கு கடற்படை கட்டளை மருத்துவமனையால் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியின் மூலம், கடலில் ஏற்படக் கூடிய அவசர நிலைமைகளில் அடிப்படை முதலுதவி வழங்குவதன் முக்கியத்துவம் மற்றும் அத்தகைய அவசரநிலையை எவ்வாறு நிர்வகிப்பது, தொற்றாத மற்றும் முன்தொற்று நோய்களைத் தடுப்பது, போதைப்பொருள் பாவனையைத் தடுத்தல், மனநலம் மற்றும் சுகாதார நடைமுறைகள் குறித்து மீனவ மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.