திருகோணமலை கடற்படைப் பயிற்சியில் இலங்கை கடற்படையின் கடல்சார் செயல்பாட்டு சிறப்பை கடற்படை தளபதி வலியுறுத்தினார்
கிழக்குக் கடலில் நடைபெற்று வரும் ‘திருகோணமலை கடற்படைப் பயிற்சி - 2025’ (TRINEX-25) இல் பங்கேற்ற கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, இன்று (2025 ஜூலை 25) இலங்கை கடற்படைக் கப்பலான கஜபாஹுவிலிருந்து பயிற்சியின் கடல்சார் அத்தியாயத்தை கண்காணித்து, படிப்படியாக மாறிவரும் பாதுகாப்பு சூழலை எதிர்கொண்டு கடற்படையின் செயல்பாட்டை சிறப்பிற்குத் தேவையான உயர் மட்ட தயார்நிலையை வலியுறுத்தினார்.
அதன்படி, திருகோணமலை கடற்படைப் பயிற்சியை மேற்பார்வையிட கடற்படைத் தளபதியின் வருகையானது, தந்திரோபாய அளவிலான நிபுணத்துவம் மற்றும் மூலோபாய தொலைநோக்கு ஆகியவற்றின் கலவையைக் குறிக்கிறது. இதன் மூலம் இலங்கை கடற்படை எந்த சூழ்நிலையிலும் நாட்டின் கடல் வலயத்தை பாதுகாக்க மிகவும் பயிற்சி பெற்ற, ஒழுக்கமான மற்றும் உறுதியான கடற்படை என்பதை நிரூபிக்கிறது.