இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளின் செயல்பாட்டுத் தயார்நிலையை வலுப்படுத்தும் கூட்டுப் பயிற்சி SLINEX-25 வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பன்னிரண்டாவது (12) இருதரப்பு கடற்படைப் பயிற்சியான SLINEX -25, இலங்கையின் மேற்கே கொழும்பிற்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் 2025 ஆகஸ்ட் 18 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

அதன்படி, இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் இயங்குதன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வருடாந்திர இலங்கை-இந்திய கடற்படைப் பயிற்சியில் இலங்கை கடற்படை பங்கேற்றது. இந்த முறை, இலங்கை தரப்பில் இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களான விஜயபாகு மற்றும் சயுர உம் இலங்கை விமானப்படையின் பெல் 412 ஹெலிகாப்டர் ஆகியனவும் இந்தியத் தரப்பில் இந்திய கடற்படையின் போர்க்கப்பல்களான Tanker வகையைச் சேர்ந்த ‘INS Jyoti’ மற்றும் Destroyer வகையைச் சேர்ந்த ‘INS Rana’ ஆகிய கப்பல்களும் பங்கேற்றன.

துறைமுகம் மற்றும் கடல் கட்டங்களில் உயர் தொழில்முறையுடன் வெற்றிகரமாக ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்தப் பயிற்சி, இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளின் செயல்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் தயார்நிலையை வலுப்படுத்தியது.

மேலும், இந்தப் பயிற்சியுடன் இணைந்து, இலங்கைக்கான இந்திய துணை உயர் ஸ்தானிகர் Dr. Satyanjal Pandey, இந்திய கடற்படைக் கப்பல்களை ஆய்வு செய்ததில் இணைந்த, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ Santosh Jha மற்றும் இந்திய கப்பல்களின் கட்டளை அதிகாரிகள், பத்தரமுல்லவில் உள்ள இந்திய அமைதி காக்கும் படை நினைவுச்சின்னத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர். மேலும், பயிற்சி பரிமாற்றத் திட்டங்கள், விளையாட்டுத் நிகழ்வுகள் மற்றும் சுற்றுலா சுற்றுப்பயணங்கள் உள்ளிட்ட இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லெண்ணத்தையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பயிற்சிகளிளும் இந்திய கடற்படை வீரர்கள் பங்கேற்றனர்.

மேலும், இத்தகைய கூட்டு கடற்படைப் பயிற்சிகள் ஒத்துழைப்பையும், இயங்கும் திறனையும் மேம்படுத்துகின்றன; பொதுவான கடல்சார் சவால்களை வெற்றிகரமாக நிர்வகித்தல் மற்றும் கடல் வழியாக வெளிப்படும் பாரம்பரியமற்ற கடல்சார் அச்சுறுத்தல்கள் உட்பட வளர்ந்து வரும் போக்குகள் ஆகியவை இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளுக்கு நிலையான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை வளர்ப்பதில் பெரும் உதவியாக இருக்கும்.