கடற்படையினர் திருகோணமலையில் சுகாதார மேம்பாட்டு திட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர்
இலங்கை கடற்படை, திருகோணமலை நகர லயன்ஸ் கழகத்துடன் இணைந்து, 2025 ஆகஸ்ட் 20 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் தொற்றா நோய்களைக் கண்டறிதல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது.
அதற்கமைவாக, "க்லீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்தின் கீழ், சமூகத்தை சமூக ரீதியாக வலுவூட்டுவதற்கு பங்களிக்கும் வகையில், கடற்படையின் மற்றுமொரு சமூகப் பணியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சுகாதார மேம்பாட்டுத் திட்டம், நீரிழிவு உள்ளிட்ட தொற்றாத நோய்களை முன்கூட்டியே கண்டறிவது குறித்து சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், கிழக்கு கடற்படை கட்டளை மருத்துவ ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சுகாதார மேம்பாட்டு திட்டத்தில் திருகோணமலை நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.