வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே கடமைகளை பொறுப்பேற்றார்

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, 2025 ஆகஸ்ட் 21 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கடற்படை மரபுப்படி வடக்கு கடற்படை கட்டளைக்கு ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக இருந்த ரியர் அட்மிரல் ஜகத் குமார, கட்டளைத் தலைமையகத்தில் புதிய தளபதியிடம் தளபதியின் கடமைகளை ஒப்படைத்தார்.