இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான 'KRI BRAWIJAYA-320' என்ற கப்பல் தீவைவிட்டு புறப்பட்டது

இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலான 'KRI BRAWIJAYA-320' அதன் விநியோக மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்து 2025 ஆகஸ்ட் 31 ஆம் திகதி தீவை விட்டுப் புறப்பட்டதுடன், மேலும் கொழும்பு துறைமுகத்தில் கப்பலுக்கு இலங்கை கடற்படை பாரம்பரிய முறையில் கடற்படையினர் பிரியாவிடையளித்தனர்.

இந்த விஜயத்தின் போது, கப்பலின் கட்டளை அதிகாரிக்கும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவுக்கும் இடையே ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பு கப்பலில் நடைபெற்றதுடன், மேலும் கடற்படைத் தளபதி இலங்கைக்கான கௌரவ இந்தோனேசிய தூதருடன் கப்பலில் நடைபெற்ற பாரம்பரிய சடங்கு நிகழ்விலும் பங்கேற்றார். கப்பலின் கட்டளை அதிகாரி கடற்படை தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் அதிகாரப்பூர்வ சந்திப்புகளையும் நடத்தினார், அங்கு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உட்பட முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு விடயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

மேலும், ‘KRI BRAWIJAYA-320’ போர்க்கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில், அதன் குழுவினர் கொழும்பு பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலா தளங்களைப் பார்வையிடுவதிலும் பங்கேற்றனர்.