பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் அதிகாரிகள் குழு கடற்படைத் தளபதியை சந்தித்தனர்

பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் பணியாளர் பாடநெறியைப் பயின்று வரும் பங்களாதேஷ் முப்படைகளின் கெடட் அதிகாரிகள் மற்றும் கல்விப் பணியாளர்களைக் கொண்ட, இலங்கையில் படிப்புச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள, Group Captain Salahuddin Ahmed தலைமையிலான அதிகாரிகள் குழு 2025 செப்டம்பர் 08 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை சந்தித்தனர்.

அதன்படி, அதிகாரிகள் குழு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை சந்தித்து சுமூகமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன், குறித்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதிக்கும் பங்களாதேஷ் தூதுக்குழுவின் தலைவருக்கும் இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறப்பட்டன.

மேலும், பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவும் இலங்கை கடற்படையின் பங்கு குறித்த விரிவுரையில் பங்கேற்றியதுடன், மேலும் செயல்பாட்டு இயக்குநர் ஜெனரல், உட்பட கடற்படை தலைமையகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.