இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 260 வது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 306 பயிற்சி மாலுமிகள் வெளியேறிச் செல்கின்றனர்

இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 260வது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த இருநூற்று எழுபத்து மூன்று (273) நிரந்தர பயிற்சி மாலுமிகள் மற்றும் முப்பத்து மூன்று (33) தன்னார்வ பயிற்சி மாலுமிகள் அடங்கிய முந்நூற்று ஆறு (306) மாலுமிகள், தங்கள் அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, 2025 செப்டம்பர் 13 ஆம் திகதி அன்று புனேவையில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் ஷிக்‌ஷா நிறுவனத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில் இருந்து வெளியேறிச் சென்றனர். இலங்கை கடற்படை கப்பல் ஷிக்‌ஷா நிறுவனத்தின் தளபதி மற்றும் கட்டளை அதிகாரி கெப்டன் லக்ஷ்மன் அமரசிங்கவின் அழைப்பின் பேரில், விநியோகம் மற்றும் சேவை இயக்குநர் ஜெனரல் ரியர் அட்மிரல் ருவன் கலுபோவில,வெளியேறிச் செல்லும் அணிவகுப்பில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றார்.

சவாலான வாழ்க்கையைத் தேடும் நாட்டின் துடிப்பான மகன்கள் மற்றும் மகள்கள் இலங்கை கடற்படையில் சேர்ந்து பல்வேறு தொழில்முறை துறைகளில் தாய்நாட்டிற்கு சேவை செய்ய கடற்படை ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. அதில் அதிகபட்ச நன்மைகளைப் பெற்ற 306 மகன்கள் மற்றும் மகள்களில், 177 பேர் நிரந்தர பிரிவில் பயிற்சி மாலுமிகளாகவும், 96 பேர் பயிற்சி பெண் மாலுமிகளாகவும், தன்னார்வப் பிரிவில் 14 பேர் பயிற்சி மாலுமிகளாகவும், 19 பயிற்சி பெண் மாலுமிகளாக மொத்தமாக 306 பயிற்சி மாலுமிகள், கடற்படையில் பயிற்சி மாலுமிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான முன்னணி பயிற்சி நிறுவனமான புனேவில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் ஷிக்‌ஷா நிறுவனத்தில் 260வது ஆட்சேர்ப்பின் கீழ் அடிப்படை பயிற்சிக்காக இணைக்கப்பட்டனர்.

அடிப்படை பயிற்சியின் போது விசேட திறன்களை வெளிப்படுத்திய கேடட்களுக்கு பிரதம விருந்தினர் கோப்பைகளை வழங்கினார். அதன்படி, 260வது ஆட்சேர்ப்பின் சிறந்த சிறந்த பயிற்சி மாலுமிக்கான கோப்பையை பயிற்சி மாலுமி அய்எஸ் தில்ஷானினாலும், அனைத்து பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்கான கோப்பையை பயிற்சி பெண் மாலுமி எம்ஜிஇஎச்என்எஸ் முனசிங்கவும், சிறந்த விளையாட்டு வீரருக்கான கோப்பையை பயிற்சி மாலுமி பிஜிகேடி ஜெயரத்னவும், சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான கோப்பையை பயிற்சி பெண் மாலுமி எம்எம்எச்எஸ் பெரேராவும், சிறந்த துப்பாக்கி சுட்டு வீரருக்கான கோப்பையை பயிற்சி மாலுமி எச்எஸ்எம் சந்திரதிலகவும் வென்றனர். இதேபோல், 260 வது ஆட்சேர்ப்பின் சிறந்த பிரிவிற்கான கோப்பையை ‘ஹேமமாலி’ பிரிவு வென்றது.

வெளியேறிச் செல்லும் பயிற்சி மாலுமிகளுக்கு உரையாற்றிய விநியோகம் மற்றும் சேவைகள் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ருவன் கலுபோவில, முதலில் வெளியேறிச் செல்லும் பயிற்சி மாலுமிகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் தனது கருத்துக்களைத் தெரிவித்த அவர், பயிற்சியின் மூலம் பெறப்படும் அறிவு, திறன்கள் மற்றும் ஒழுக்கம் எதிர்காலத்தில் வெளியேறிச் செல்லும் மாலுமிகளுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளை வெற்றிகரமாகச் செய்வதற்கு பலமாக இருக்கும் என்றும், பெறப்படும் பயிற்சி அவர்களின் கடற்படை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் கூறினார்.

கடற்படையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்பை கடற்படை உருவாக்கியுள்ளது என்று கூறிய ரியர் அட்மிரல் ருவன் கலுபோவில, தாய்நாட்டிற்கு சேவை செய்ய தங்கள் மகள்களை கடற்படையில் சேர ஊக்குவித்த வெளியேறிச் செல்லும் பெண் மாலுமிகளின் அன்பான பெற்றோருக்கும், தாய்நாட்டிற்கு சேவை செய்ய தங்கள் மகன்களை கடற்படைக்கு அனுப்பிய அன்பான பெற்றோருக்கும் நன்றி தெரிவித்தார். பயிற்சி மாலுமிகளின் பயிற்சிக்கு பங்களித்த ஷிக்‌ஷா நிறுவனத்தின் பயிற்சி ஆலோசகர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

வெளியேறிச் செல்லும் பயிற்சி மாலுமிகளின் பயிற்சி நிகழ்ச்சி, கடற்படை இசைக்குழு மற்றும் கலாசார குழுவின் நிகழ்ச்சியினாலும், கடற்படையின் அங்கம் ஹரப குழுவின் வண்ணமயமான காட்சிகளுடன் இந் நிகழ்வு நிறைவடைந்த்து.

மேலும், வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் இந்திக டி சில்வா மற்றும் நிர்வாக இயக்குநர் ஜெனரல் கொமடோர் தனேஷ் பத்பேரிய உள்ளிட் கொடி அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள், வடமத்திய கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகளும் மாலுமிகள் மற்றும் வெளியேறிச் செல்லும் பயிற்சி மாலுமிகளின் பெற்றோர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.