கடற்படை தலைமையகத்தில் காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு 2025 குறித்த ஊடக சந்திப்பு
‘Maritime Outlook of the Indian Ocean under Changing Dynamics’ என்ற கருப்பொருளின் கீழ் இலங்கை கடற்படை 12வது முறையாக ஏற்பாடு செய்துள்ள காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு, 2025 செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் வெலிசரவில் உள்ள ‘Wave n’ Lake’ கடற்படை உற்சவ மண்டபத்தில் நடைபெற உள்ளது. இது தொடர்பான ஊடக சந்திப்பு இன்று (2025 செப்டம்பர் 15) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படையின் பிரதிப் பிரதானி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவின் தலைமையில் நடைபெற்றது.
முப்பத்தாறு (36) நாடுகள் மற்றும் பதினான்கு (14) சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த கடற்படைத் தலைவர்கள், கடல்சார் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் மூலோபாயவாதிகள் கலந்து கொள்ளும் சர்வதேச கடல்சார் மாநாட்டின், இம்முறை மாநாட்டின் கருப்பொருள் குறித்து விவாதிக்கப்படவுள்ள; கடல்சார் சூழலைப் பாதுகாத்தல், சட்ட கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட கடல்சார் நிர்வாகம், கடல்சார் பொருளாதாரம், கடல்சார் நிலைத்தன்மை மற்றும் கடல் மாசுபாடு இல்லாத சுத்தமான இந்தியப் பெருங்கடல் பகுதியை எதிர்கால சந்ததியினருக்கு வழங்குதல், அத்துடன் புதிய போக்குகள், பாதுகாப்பு சவால்கள் மற்றும் கூட்டு அணுகுமுறையுடன் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் புவிசார் அரசியல் சூழலை நிர்வகித்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு இங்கு விளக்கப்பட்டது.
மேலும், வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, இயக்குநர் ஜெனரல் செயல்பாடுகள் ரியர் அட்மிரல் ஹர்ஷ டி சில்வா, இயக்குநர் கடற்படை நடவடிக்கைகள் கெப்டன் அதுல ஜயவீர, இயக்குநர் கடற்படை ஊடகம் கமாண்டர் புத்திக சம்பத், சிரேஷ்ட ஒருங்கிணைப்பு அதிகாரி செயல்பாடுகள் கமாண்டர் பெதும் ரணவீர மற்றும் பணியாளர் அதிகாரி (நீதிச் சேவை) விசாரணை III லெப்டினட் தானியா எட்வர்ட் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.