புதிய MASTER CHIEF PETTY OFFICER OF NAVY அதிகாரியாக MASTER CHIEF PETTY OFFICER ஏஎச்டி வீரதுங்க நியமிக்கப்பட்டார்

இலங்கை கடற்படையின் புதிய (MASTER CHIEF PETTY OFFICER OF NAVY - MCPON) ஆக MASTER CHIEF PETTY OFFICER ஏஎச்டி வீரதுங்க 2025 செப்டம்பர் 18, அன்று நியமிக்கப்பட்டதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, MASTER CHIEF PETTY OFFICER ஏஎச்டி வீரதுங்கவுக்கு அவ் பதவிக்கு உரித்தான கை கவசம் மற்றும் கோலை வழங்கி கடற்படைத் தலைமையகத்தில் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

அதன்படி, MASTER CHIEF PETTY OFFICER OF NAVY அதிகாரியாக பணியாற்றிய MASTER CHIEF PETTY OFFICER பிஆர்எம்ஜிபி புஸ்ஸலமங்கட, கடற்படையில் இருந்து ஓய்வு பெற உள்ளதால், புதிய MASTER CHIEF PETTY OFFICER OF NAVY ஆக MASTER CHIEF PETTY OFFICER ஏஎச்டி வீரதுங்க நியமிக்கப்பட்டார்.

மாலுமிகளின் நலன், பயிற்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளின் தரம் மற்றும் செயல்திறனை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, MASTER CHIEF PETTY OFFICER OF NAVY அவர்களுக்கு பொருத்தமான வழிகள் மூலம் விடயங்களைச் சமர்ப்பிக்க அதிகாரம் உள்ளது, மேலும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் சிரேஷ்ட மாலுமிக்கு கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகவும் சிரேஷ்ட மாலுமியாக அதிகாரப்பூர்வ விழாக்கள், பயிற்சிகள் மற்றும் பிற நிகழ்வுகளில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் பணியாளர் பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் சஞ்சீவ பிரேமரத்ன மற்றும் கடற்படை தலைமையகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.