2024 கொள்முதல் வழிகாட்டுதல்கள் குறித்து கடற்படை வீரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது

கடற்படையின் மாலுமிகளின் தொழில்முறை அறிவை மேம்படுத்துவதற்கான கொள்முதல் வழிகாட்டி 2024 (Procurement Guideline 2024) மற்றும் ஏல செயல்முறை குறித்த விழிப்புணர்வு திட்டம், 2025 செப்டம்பர் 17 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் உள்ள அட்மிரல் சோமதிலக திசாநாயக்க கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி செயலகத்தின் நிதிப் பிரிவின் தலைமை கணக்காளர் திரு. ஜிஎஸ்கே சமரதுங்கவின் வளங்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.

அதன்படி, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம், கொள்முதல் செயல்பாட்டில் நிதி விவேகம், சிறந்த முடிவெடுத்தல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த விழிப்புணர்வை வழங்கியதுடன், மேலும் கடற்படை விநியோகப் பிரிவைச் சேர்ந்த கடற்படை மற்றும் சிவில் பணியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும், இந்த விழிப்புணர்வு திட்டத்தின் மூலம்; கொள்முதல் வழிகாட்டுதல்கள் 2024 வெளியீட்டுடன் இணைந்து, ஏல மதிப்பீட்டு விதிகளின்படி கடமைகளைச் செய்வது குறித்த விழிப்புணர்வை கடற்படை ஏற்படுத்தும் என்றும், அதன் மூலம் சரியான வழிமுறைகளுக்கு ஏற்ப திறமையான கொள்முதல் செயல்முறையை நிறுவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.