போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை எதிர்ப்பது குறித்து மீனவ சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு பாநெறி
நீர்கொழும்பு பகுதியில் உள்ள மீனவ சமூகத்தினருக்கு போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி, உஸ்வெட்டகெய்யாவ, இலங்கை கடற்படைக் கப்பலான கெளனியில், 2025 செப்டம்பர் 19 ஆம் திகதி அன்று அப்பகுதியில் உள்ள மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.
அதன்படி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளின் பாதகமான விளைவுகள் குறித்தும், தற்போதுள்ள சட்ட கட்டமைப்பு குறித்தும் மீனவ சமூகத்திற்கு தெரிவிக்கப்பட்டதுடன், மேலும் சட்டப்பூர்வமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேற்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி, நீர்கொழும்பு மீன்வள உதவி இயக்குநர், மேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள், மீன்வள ஆய்வாளர்கள் மற்றும் மீன்பிடி சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.