நிகழ்வு-செய்தி

12வது காலி உரையாடலின் இரண்டாவது அமர்வின் போது, மாறிவரும் இயக்கவியலை எதிர்கொள்ளும் வகையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் நிர்வாகம் குறித்த நிபுணத்துவ கலந்துரையாடல்

2025 செப்டம்பர் 24, அன்று நடைபெற்ற காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டின் இரண்டாவது அமர்வின் போது, பேராசிரியர் Quentin Hanich அவர்களால் (Maritime Governance Under Changing Dynamics) என்ற கருப்பொருளில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.

25 Sep 2025

12வது காலி உரையாடலின் முதல் அமர்வு “மாறிவரும் இயக்கவியலில் கடல்சார் சூழல்” என்ற துணைகருப்பொருளின் கீழ் நடைபெறுகிறது

ஏற்பாடு செய்த காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டின் முதல் அமர்வு, பேராசிரியர் Ronan Long தலைமையில், (Marine Environment Under Changing Dynamics) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது.

25 Sep 2025

மாறிவரும் இயக்கவியலுக்கு முகங்கொடுக்கும் வகையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கடல்சார் கொள்கை குறித்த 12வது காலி உரையாடலில் பயனுள்ள மற்றும் அறிவார்ந்த கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக நடைபெற்றன

இலங்கை கடற்படை பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து பன்னிரண்டாவது (12வது) ஆண்டாக ஏற்பாடு செய்த காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு, 2025 செப்டம்பர் 24 ஆம் திகதி வெலிசரவில் உள்ள Wave n' Lake மண்டபத்தில், இலங்கை உட்பட 37 நாடுகள் மற்றும் 16 சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த கடல்சார் பங்குதாரர்கள், பிரதிநிதிகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு நிபுணர்களின் பங்கேற்புடன் தொடங்கியது ‘Maritime Outlook of the Indian Ocean under Changing Dynamics’ என்ற கருப்பொருளில் தொடக்க அமர்வு உட்பட மூன்று அமர்வுகளின் கீழ் நடைபெற்ற கலந்துரையாடலின் பிறகு மாநாட்டின் முதல் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

25 Sep 2025

காலி உரையாடல் 2025 சர்வதேச கடல்சார் மாநாடு வெலிசரவில் ஆரம்பமாகியது

இலங்கை கடற்படை பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து பன்னிரண்டாவது (12வது) முறையாக ஏற்பாடு செய்த காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு, இன்று (2025 செப்டம்பர் 24) வெலிசரவில் உள்ள Wave n' Lake மண்டபத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் பங்கேற்புடன் ஆரம்பமாகியதுடன், ‘Maritime Outlook of the Indian Ocean under Changing Dynamics’ என்ற கருப்பொருளில் இலங்கை உட்பட 37 நாடுகள் மற்றும் 16 சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல கடல்சார் பாதுகாப்பு நிபுணர்கள் இந்த (2025 செப்டம்பர் 24-25) இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்பார்கள்.

25 Sep 2025