மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணப் பயிற்சி அமரடவானது 2025 விரைவு அதிரடி படகு படை தலைமையகத்தில் ஆரம்பமாகிறது
மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணப் பயிற்சி அமரடவானது 2025 நவம்பர் 12 ஆம் திகதி புத்தளம், கங்கே வாடியவில் உள்ள கடற்படை விரைவு அதிரடி படகு படை தலைமையகத்தில் உள்ள அனர்த்த முகாமைத்துவ பயிற்சிப் பாடசாலையில் ஆரம்பமானது.
“All hands on deck” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த மூன்று (03) நாள் பயிற்சி அமர்வானது கோட்பாட்டு மற்றும் நடைமுறை பயிற்சிகளைக் கொண்டதாகும்.
அதன்படி, முதல் நாளில், பேரிடர் தயார்நிலை, ஒருங்கிணைப்பு மற்றும் பதிலளிப்பது குறித்த விடயங்கள் விளக்கக்காட்சிகள் மூலம் நிபுணர்களால் முன்வைக்கப்பட்டது.
































