75வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படைக்கு ஆசிர்வதிக்கும் வகையில் ஒரு கூட்டு கிறிஸ்தவ உற்சவம் மற்றும் நன்றி செலுத்தும் ஆராதனை
இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படைக்கு ஆசிர்வதிக்கும் வகையில் நடத்தப்படும் மத நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, கூட்டு கிறிஸ்தவ உற்சவம் மற்றும் நன்றி செலுத்தும் ஆராதனை , கோட்டாஞ்சேனையில் உள்ள செயிண்ட் லூசியா கதீட்ரலில், கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் தலைமையில், பிரதி தலைமை அதிகாரி,விநியோகம் மற்றும் சேவை இயக்குநர் ரியர் அட்மிரல் ருவன் கலுபோவிலன் தலைமையில், 2025 நவம்பர் 21 அன்று நடைபெற்றது.
1991 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை கடற்படை கிறிஸ்தவ சங்கம், மிக உயர்ந்த கடற்படை பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளின்படி தொடர்ச்சியாக 34 ஆண்டுகளாக கூட்டு உற்சவம் மற்றும் நன்றி செலுத்தும் ஆராதனையை நடத்தி வருகிறது. இந்த உற்சவம் மற்றும் நன்றி செலுத்தும் ஆராதனை திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் எமெனுவேல் அவர்களின் தலமையின் கீழ், மேலும் இது எட்டு கத்தோலிக்க பாதிரியார்களின் கருணைமிக்க இருப்பு மற்றும் பிரார்த்தனைகளுடன் மிகவும் கண்ணியமான முறையில் நடைபெற்றது.
"கடலின் பாதுகாவலரே, எங்கள் இறைவனின் அமைதியும் பலமும் உங்களுடன் இருக்கட்டும்," என்று திருகோணமலை ஆயர் டாக்டர் நோயல் இம்மானுவேல், இலங்கை கடற்படை அடைந்த அனைத்து வெற்றிகளுக்கும் கடவுளைப் புகழ்ந்து நன்றி தெரிவித்தார். தாய்நாட்டிற்கு அமைதியைக் கொண்டுவருவதற்காக உன்னத தியாகங்களைச் செய்த அனைவரையும் மரியாதையுடன் நினைவுகூரும் வகையில், கிறிஸ்தவ மத நடைமுறைகளுக்கு ஏற்ப கடற்படைக் கொடி மற்றும் கடற்படை கட்டளைக் கொடிகளுக்கு ஆசீர்வாதங்கள் வழங்கப்பட்டன. அதேபோல், கடற்படையின் 75 ஆண்டுகால வரலாற்றில் தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க தங்கள் உயிரைத் தியாகம் செய்த மற்றும் போரில் வீழ்ந்த அனைத்து கடற்படை வீரர்களுக்கும், தற்போது பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற அனைத்து கடற்படை வீரர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும், முழு கடற்படைக்கும் ஆசீர்வாதங்கள் தெரிவிக்கப்பட்டன.
மேலும், இந்த சேவையில் (ஓய்வு பெற்ற) முன்னாள் கடற்படைத் தளபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி உள்ளிட்ட கடற்படை இயக்குநர் ஜெனரல்கள், இலங்கை கடலோர காவல்படையின் இயக்குநர் ஜெனரல், கடற்படை சேவா வனிதா நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், கடற்படை தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் குழு கலந்து கொண்டனர்.


