பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிக்கொண்டு இந்திய கடலோர காவல்படை கப்பல் ICGS SHAURYA தீவை வந்தடைந்தது

“தித்வா” சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற இந்திய கடலோர காவல்படை கப்பலான ICGS SHAURYA, 2025 டிசம்பர் 15 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரால் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் மரபுப்படி கடற்படையினர் குறித்த கப்பலை வரவேற்கப்பட்டனர்.

அதன்படி, இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்துடன் ஒருங்கிணைந்து, ICGS SHAURYA கப்பலில் இருந்து கொண்டுவரப்பட்ட மனிதாபிமான உதவிகளை ஒப்படைக்கும் நிகழ்வில் இலங்கைக்கான இந்திய துணை உயர் ஸ்தானிகர் Dr. Satyanjal Pandey இராஜதந்திர அதிகாரிகள், துறைமுக பிரதி அமைச்சர் கௌரவ ஜனித ருவன் கொடித்துவக்கு, ICGS SHAURYA கப்பலின் கட்டளை அதிகாரி Deputy Inspector General Arun Singh மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமார, அரசு அதிகாரிகள் குழுவினரும் கலந்து கொண்டனர்.

மேலும், ICGS SHAURYA வின் கட்டளை அதிகாரிக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதிக்கும் இடையே மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகப்பூர்வ சந்திப்பொன்று நடைபெற்றதுடன், மேலும் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசு பரிமாற்றம் நடைபெற்றது.