சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் தளபதி கடற்படைத் தளபதியை சந்தித்தார்

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் விஜயநாத் ஜெயவீர, இன்று (2026 ஜனவரி 09,) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.

அதன்படி, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாரம்பரியத்தின் படி நடைபெற்ற இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், பணியாளர் கல்லூரியின் தளபதிக்கும் கடற்படைத் தளபதிக்கும் இடையே பயிற்சி நடவடிக்கை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து ஒரு சுமுகமான கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது.

மேலும், கடற்படைத் தளபதி தனது வாழ்த்துக்களைத் ஸ்டாஃப் கல்லூரியின் தளபதியிடம் தெரிவித்தார், மேலும் உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே ஒரு நினைவுப் பரிசு பரிமாறப்பட்டது.