இந்திய கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச கடற்படை மதிப்பாய்வு மற்றும் MILAN - 26 பலதரப்பு கடற்படைப் பயிற்சிக்குப் பிறகு 'சாகர' மற்றும் 'நந்திமித்திர' ஆகியவை இலங்கையை வந்தடைந்தன
இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கிழக்கு இந்தியப் பெருங்கடல் கடற்கரையை மையமாக கொண்டு 2026 பிப்ரவரி 18 முதல் 26 வரை நடைபெற்ற MILAN - 26 பலதரப்பு கடற்படைப் பயிற்சி மற்றும் சர்வதேச போர்க்கப்பல்சள் கண்காணிப்பில் இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை கடற்படைக் கப்பல்களான சாகர மற்றும் நந்திமித்திர ஆகிய கப்பல்கள், பயிற்சி வெற்றிகரமாக முடிவடைந்த பின்னர், 2026 பிப்ரவரி 27 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்ததுடன் இலங்கை கடற்படையினர் குறித்த இரண்டு கப்பல்களையும் கடற்படை மரபுப்படி கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.
பிராந்திய மற்றும் உலகளாவிய பங்குதாரர்கள் பங்குபற்றிய (United Through Oceans) என்ற கருப்பொருளின் கீழ் நடைப்பெற்ற சர்வதேச கடற்படை கண்காணிப்பிலும், (Camaraderie Cohesion Collaboration) என்ற கருப்பொருளின் கீழ் நடைப்பெற்ற MILAN-26 பலதரப்பு கடற்படைப் பயிற்சியிலும் இலங்கை கடற்படை பங்கேற்றதன் மூலம், பரஸ்பர புரிதல் மூலம் கடல்சார் பங்குதாரர்களுடன் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், கூட்டு அணுகுமுறை மூலம் கடல்சார் அபிலாஷைகள் மற்றும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கும் பதிலளிப்பதற்கும் இலங்கையின் அர்ப்பணிப்பு பிரதிபலித்தது.
அதன்படி, துறைமுக அத்தியாயம், கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு துறைகளில் நிபுணத்துவத்தைப் பரிமாறிக் கொள்ளவும், சர்வதேச கடல்சார் மாநாட்டில் பங்கேற்கவும் தரப்பினருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. சாகர மற்றும் நந்திமித்திர கப்பல்களின் அங்கத்துவ குழுவினர்கள், கலாச்சார நடவடிக்கைகள், தொழில்முறை தொடர்புகள், போர்க்கப்பல்களின் செயல்பாட்டுத் தயார்நிலை குறித்த கண்காணிப்பு சுற்றுப்பயணங்கள், சர்வதேச நகர அணிவகுப்பு மற்றும் உணவு கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்தப் பயிற்சி, இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் நட்பையும் மேலும் மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இலங்கை கடற்படை இசைக்குழு மற்றும் நடனக் குழுவும் இந்த வண்ணமயமான நிகழ்விற்கு பங்களித்தன.
MILAN-26 பலதரப்பு கடற்படைப் பயிற்சியின் சமுத்திர அத்தியாயம், கடற்படைகள் மற்றும் கடலோர காவல்படைகளுக்கு இடையேயான இயங்குதன்மை மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும், அறிவைப் பரிமாறிக் கொள்வதையும் நோக்கமாகக் கொண்ட சிக்கலான கடற்படைப் பயிற்சிகளைக் கொண்டிருந்ததுடன், நட்பு நாடுகளைச் சேர்ந்த 18 போர்க்கப்பல்கள் மற்றும் 29 விமானங்கள் உட்பட 42 நீர்மூழ்கிக் கப்பல்கள் பங்கேற்ற இந்தப் பயிற்சியில், போர் அமைப்புகளில் கப்பல்கள் நகருதல், துப்பாக்கிச் சூடு பயிற்சிகள், நீருக்கடியில் போர் பயிற்சிகள் மற்றும் கப்பல்களில் உலங்கு வானூர்திகளை தரையிறக்குதல் உள்ளிட்ட பல பயிற்சிகளும் இடம்பெற்றன.
மேலும், பல பிராந்திய மற்றும் உலகளாவிய கடற்படைகள் மற்றும் கடலோர காவல்படையினர் பங்கேற்கும் இத்தகைய கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்பதன் மூலம், கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பிராந்திய மற்றும் உலகளாவிய தரப்பினருடன் ஒரு கூட்டு அணுகுமுறையில் பணியாற்றுவதில் தேவையான பரஸ்பர ஒத்துழைப்பை வளர்ப்பது, கடல்சார் செயல்பாடுகள் தொடர்பான புதிய அறிவு, திறன்கள், சிறந்த நடைமுறைகள், மூலோபாய உத்திகள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வது, புதிய சவால்களைக் கண்டறிதல் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளை கூட்டாகக் கண்டறிய முடிவது போன்ற பல நன்மைகள் உள்ளன.


