நிகழ்வு-செய்தி

இலங்கை பாதுகாப்பு தூதுக்குழு ஜப்பானில் உயர்மட்ட சந்திப்புகளில் மேட்கொண்டது

இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையிலான உயர்மட்ட பாதுகாப்பு தூதுக்குழு, 2ஆம் ஜப்பான்–இலங்கை பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக ஜப்பானுக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தைத் மேட்கொண்டது. இந்த முக்கிய நிகழ்வு, குறிப்பாக பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு துறைகளில் இரு நாடுகளுக்கிடையேயான நீண்டநாள் நட்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

20 Mar 2026

GAJABAHU கப்பலில் இலங்கை கடற்படையின் பணிக்குழுப் பிரதானி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை சிறப்புத் தூதுவர் கோர் சந்தித்தார்

எமது நீண்டகால கடல்சார் பங்காண்மையின் வலிமையினை அடையாளப்படுத்தும் வகையில் தற்போது இலங்கை கடற்படையில் சேவையிலீடுபட்டுள்ள முன்னாள் அமெரிக்க கடலோர காவற்படைக் கப்பலான SLNS GAJABAHU கப்பலில் இலங்கை கடற்படையின் பணிக்குழுப் பிரதானி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை சிறப்புத் தூதுவர் கோர் சந்தித்தார். இலங்கையை வந்தடைவதற்காக பசிபிக் சமுத்திரத்தினூடாக தற்போது பயணித்துக்கொண்டிருக்கும் நான்காவது முன்னாள் அமெரிக்க கடலோர காவற்படைக் கப்பலான ex-DECISIVE எமது கடல்சார் பாதுகாப்புப் பங்காண்மை மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை மேலும் விரிவுபடுத்தும்.

20 Mar 2026