நிகழ்வு-செய்தி

வட மத்திய கடற்படை கட்டளையின் நலன்புரி வசதிகள் விரிவாக்கப்பட்டு நிர்மானிக்கப்பட்ட விடுமுறை விடுதி திறந்து வைக்கப்பட்டது

வடமத்திய கடற்படை கட்டளையின் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்தும் பொருட்டு, இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிறுவன வளாகத்தின் நிர்வாக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட கட்டிடம் புனரமைக்கப்பட்டு விடுமுறை விடுதியாக மாற்றப்பட்டு 2025 மார்ச் 21 அன்று வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

27 Mar 2025

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத்தின் பிரதானி கடற்படை தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத்தின் பிரதானி கமாண்டர் Sean Jin மற்றும் அந்த அலுவலகத்தின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ள லெப்டினன்ட் கமாண்டர் Ros Lary ஆகியோர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை 2025 மார்ச் 26 அன்று கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தனர்.

27 Mar 2025

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’ என்ற கப்பல் தீவைவிட்டு புறப்பட்டது

2025 மார்ச் 22 ஆம் திகதி விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு வந்த ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’ என்ற கப்பல் விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்த பின் இன்று 2025 மார்ச் 25 தீவில் இருந்து புறப்பட்டதுடன், கொழும்பு துறைமுகத்தில் கப்பலுக்கு இலங்கை கடற்படை பாரம்பரிய முறையில் கடற்படையினர் பிரியாவிடையளித்தனர்.

26 Mar 2025

கூட்டு கடல்சார் படைகளின் 150 வது பணிக்குழுவின் கட்டளை அதிகாரி உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக கடற்படை தளபதியை சந்தித்தார்

கூட்டு கடல்சார் படைகளின் 150 வது பணிக்குழுவின் கட்டளை அதிகாரி, கொமடோ ரோஜர் வோட் (commodore Rodger ward) மற்றும் படையின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று 2025 மார்ச் 22 முதல் 26 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன், இதற்கு இணையாக, இந்தக் குழு இன்று (2025 மார்ச் 24) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தது.

24 Mar 2025

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்புத் திட்டத்தின் கீழ் கடற்படையால் நடத்தப்படும் பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திருகோணமலையில் நடைப்பெற்றது

போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத்தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கப்பல்களிற்குள் நுழைதல், தேடல் மற்றும் கைப்பற்றும் உத்திகள் தொடர்பான பிராந்திய ஆலோசனை பாடநெறி மற்றும் பிராந்திய கடல்சார் சட்ட அமலாக்க ஆலோசனைப் பாடநெறி ஆகியவை திருகோணமலை சிறப்புப் படகுகள் படைப்பிரிவில் சிறப்பாக நடைபெற்றதுடன். சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வினை 2025 மார்ச் 20 அன்று திருகோணமலை Sober Island Resort இல் நடத்த கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

24 Mar 2025

சிறப்பு படகுகள் படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த கடற்படை வீரர்களுக்கு கடற்படைத் தளபதியினால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன

இலங்கை சிறப்பு படகுகள் படைப்பிரிவின் 32வது ஆட்சேர்ப்புப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இரண்டு அதிகாரிகள் (02) மற்றும் முப்பத்தி நான்கு (34) மாலுமிகளுக்கு பதக்கங்கள் அணிவித்தல், அந்த படைப்பிரிவின் கட்டளைத் தளபதி, கமாண்டர் லக்மால் வீரக்கொடியின் அழைப்பின் பேரில், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் தலைமையில் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவ தலைவி திருமதி அனுஷா பனாகொட அவர்களின் பங்கேற்புடன், 2025 மார்ச் 22 அன்று திருகோணமலை, கடற்படைத் தளத்தில் உள்ள சிறப்புக் படகுகள் படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

23 Mar 2025

கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் தொழிலாளர் பங்களிப்புடன் வாஹல்கட D2 கல்லூரி புனரமைக்கப்பட்டது

“க்லீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்துடன் இணைந்து பாடசாலை வளாகங்களை சுத்தப்படுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் பழுதுபார்த்தல் ஆகிய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், அனுராதபுர மாவட்டத்தில் உள்ள வாஹல்கட D2 கல்லூரியை சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபார்த்தல் கடற்படையின் சமூக நல பங்களிப்புடன் இன்று (2025 பெப்ரவரி 22) இடம்பெற்றது.

22 Mar 2025

மஹவை உஸ்கல கெமுனு மகா வித்தியாலத்தை"மகிழ்ச்சி நிறைந்த பாடசாலையாக" மாற்றுவதற்கு கடற்படை சமூக பணியின் பங்களிப்பு

"க்ளீன் ஶ்ரீ லங்கா" என்ற தேசிய திட்டத்திற்கு இணங்க, "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் மஹவை உஸ்கல கெமுனு மகா வித்தியால வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 மார்ச் 15 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

19 Mar 2025

கடற்படை படகு உற்பத்தி முற்றத்தில் தயாரிக்கப்பட்ட 60 படகுகள் மற்றும் காயக் படகுகள் விளையாட்டுக் கழகங்களுக்கு வழங்கப்பட்டது

சர்வதேச படகுகள் மற்றும் காயக் படகுகள் கூட்டமைப்பில் (International Canoe Federation - IFC) அனுசரணை வழங்கப்பட்ட இலங்கை தேசிய படகுகள் மற்றும் காயக் படகுகள் சங்கத்தால் (National Association for Canoeing and Kayaking in Sri Lanka – NACKSL) ஆரம்பத்தில், வெலிசறை கடற்படை படகுகள் கட்டும் தளத்தில் (NBBY) தீவின் புகழ்பெற்ற விளையாட்டுக் கழகங்களுக்கு தயாரிக்கப்பட்ட அறுபது (60) படகுகள் மற்றும் காயக் படகுகளை ஒப்படைத்தல், 2025 மார்ச் 17 அன்று வெலிசறை கடற்படை படகுத் தளத்தில்,கடற்படை தளபதியின் தலைமையில் நடைபெற்றது.

18 Mar 2025

அம்பாறை,பொத்துவில் சிங்கள மகா வித்தியாலயத்தை"மகிழ்ச்சி நிறைந்த பாடசாலையாக" மாற்றுவதற்கு கடற்படை சமூக பணியின் பங்களிப்பு

"க்ளீன் ஶ்ரீ லங்கா" என்ற தேசிய திட்டத்திற்கு இணங்க, "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் அம்பாறை,பொத்துவில் சிங்கள மகா வித்தியாலய வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 மார்ச் 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

18 Mar 2025