நிகழ்வு-செய்தி
கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா கடற்படையின் பங்களிப்புடன் சிறப்பாக நிறைவடைந்தது

கடற்படையினரின் பங்களிப்புடன் கச்சத்தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா 2025 மார்ச் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் பெருமளவான இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தியாவின் சிவகங்கை மறைமாவட்டத்தின் ஆயர் கௌரவ லூர்து ஆனந்தன் அவர்கள் (Rt. Revd. Dr. Lourdu Ananthan. Bishop of Sivagangai diocese, India) யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆயர் கௌரவ பீ.ஜே. ஜெபரத்னம் அவர்கள் (Very Revd. Fr. P. J. Jebaratnam, Vicar General, Jaffna Diocese) இந்தியாவின் ராமேஸ்வரத்தில் உள்ள பாரிஷ் கௌரவ ஆயர் அசோக் அவர்கள் (Revd. Fr. Ashok, Parish Priest, Rameswaram, India) மற்றும் நெடுந்தீவு திருச்சபை ஆயர் அருட்தந்தை பி.பத்திநாதன் அவர்கள் (Revd. Fr. P. Pathinathan. Parish Priest, Delft) ஆகியோரின் வழிகாட்டலில், யாழ் ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் பர்நாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் திரு. மருதலிங்கம் பிறதீபனின் (Maruthalingam Piiratheepan) ஆகியோரின் ஏற்பாட்டிலும், இலங்கை கடற்படையின் முழுமையான உழைப்பு, தொழில்நுட்பம் மற்றும் வள பங்களிப்புடன், வெற்றிகரமாக நடைபெற்றது.
17 Mar 2025
ரியர் அட்மிரல் பிரசாந்த அந்தணி கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

ரியர் அட்மிரல் பிரசாந்த அந்தணி இலங்கை கடற்படையில் 34 வருடத்திற்கும் அதிகமான சேவை காலத்தை நிறைவு செய்து இன்று (2025 மார்ச் 17) இன்று கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
17 Mar 2025
பிரான்சிய கடற்படைக் கப்பல் ‘PROVENCE’ உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது

பிரான்சிய கடற்படைக்கு சொந்தமான ‘PROVENCE’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இன்று (2025 மார்ச் 16) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுப்படி கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
16 Mar 2025
கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2025 மார்ச் 14 அன்று வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டபோது, வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள், மாலுமிகளை சந்தித்து உரையாற்றினார். கடற்படையின் நடவடிக்கைகள், பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் மேம்பாட்டு மற்றும் நலன்புரி திட்டங்களை திறம்பட நடத்துவதற்கான அறிவுரைகளை வழங்கினார். மேலும், இவ் கட்டளையுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு கடற்படையின் பொறுப்புகள் குறித்து விளக்கினார்.
15 Mar 2025
கண்டி, தர்மவிக்ரம மகளீர் பாடசாலையை "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலையாக" மாற்றுவதற்கு கடற்படை சமூக பணியின் பங்களிப்பு

"க்ளீன் ஶ்ரீ லங்கா" என்ற தேசிய திட்டத்திற்கு இணங்க, "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் கண்டி, தர்மவிக்ரம மகளீர் பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 மார்ச் 11 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
14 Mar 2025
பாணதுறை பிரதமர் பெண்கள் கல்லூரி இல்ல விளையாட்டுப் போட்டியின் பிரதம அதிதியாக கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்

பாணதுறை பிரதமர் பெண்கள் கல்லூரியின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி 2025 மார்ச் 12 ஆம் திகதி பாணதுறை பொது மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றதுடன், அதன் நிறைவு விழாவின் முக்கிய நிகழ்விற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
13 Mar 2025
கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான SARCOMEX-25 பயிற்சியானது வெற்றிகரமாக முடிவடைந்தது

“கடற்படை தேடல் மற்றும் மீட்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்” SARCOMEX-25 பயிற்சி 2025 மார்ச் 11 ஆம் திகதி அன்று கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சென்னை (MRCC Chennai) மற்றும் இலங்கை கொழும்பு (MRCC Colombo) கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் கடல்சார் அவசரகாலங்களில் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றின் நோக்கத்துடன் நடாத்தப்பட்டது.
12 Mar 2025
கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான SARCOMEX-25 பயிற்சியானது வெற்றிகரமாக முடிவடைந்தது

“கடற்படை தேடல் மற்றும் மீட்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்” SARCOMEX-25 பயிற்சி 2025 மார்ச் 11 ஆம் திகதி அன்று கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சென்னை (MRCC Chennai) மற்றும் இலங்கை கொழும்பு (MRCC Colombo) கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் கடல்சார் அவசரகாலங்களில் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றின் நோக்கத்துடன் நடாத்தப்பட்டது.
12 Mar 2025
அமெரிக்க பாதுகாப்பு நிர்வாக நிறுவனத்தின் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படை தளபதியை சந்தித்தனர்

அமெரிக்க பாதுகாப்பு நிர்வாக நிறுவனத்தின் (Institute for Security Governance –ISG) பிரதிநிதிகள் சிலர், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை கடற்படைத் தலைமையகத்தில் 2025 மார்ச் 11 அன்று உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தனர்.
12 Mar 2025
சர்வதேச மகளிர் தினத்திற்காக "உங்கள் மகிழ்ச்சி உங்களுடன்" என்ற தலைப்பில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மார்ச் 08 ஆம் திகதி கொண்டாடப்பட்ட சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, "உங்கள் மகிழ்ச்சி உங்களுடன்" என்ற தலைப்பில் கனிஷ்ட பெண் மாலுமிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மார்ச் 11 ஆம் திகதி 2025 அன்று திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் அட்மிரல் வசந்த கரன்னாகொட ஆடிட்டோரியத்தில் கடற்படையின் துணைத் தலைமைத் தளபதி மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் நடைபெற்றது.
11 Mar 2025