நிகழ்வு-செய்தி
“க்லீன் ஶ்ரீ லங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் "சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற வேளைதிட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு

க்லீன் ஶ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தீவைச் சூழவுள்ள கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை சுத்தம் செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற திட்டத்துடன் இணைந்து, கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், கடற்படையின் சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு கடற்கரைச் சுத்திகரிப்பு மற்றும் சுற்றுலாத் தலங்களைச் சுத்தப்படுத்தும் நிகழ்ச்சிகள் 2025 மார்ச் 01 மற்றும் 08 ஆம் திகதிகளில் தெற்கு கடற்படை கட்டளைப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.
08 Mar 2025
ராஜாங்கனை, நீர்த்தேக்கத்தில் உள்ள மதகினை சீர்செய்வதற்கு கடற்படையின் சுழியோடி பங்களிப்பு

செயலற்ற நிலையில் இருந்த ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இடது கரை வான் மதகைச் சரிசெய்து அதனை மீண்டும் செயல்பாட்டு நிலைக்கு கொண்டு வருவதற்காக 2025 மார்ச் 05 முதல் 07 ஆம் திகதி வரை சுழியோடி ஆதரவினை வழங்க கடற்படையினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
08 Mar 2025
“க்லீன் ஶ்ரீ லங்கா” திட்டத்தின் கீழ் கடற்படையினரால் நிலாவெளி கரையோரப் பகுதியில் மங்கூஸ் மரம் நடும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது

2025 மார்ச் மாதம் 08 ஆம் திகதி, “க்லீன் ஶ்ரீ லங்கா” திட்டத்தின் கீழ், கிழக்கு கடற்படை கட்டளையின் பங்களிப்புடன், நிலாவெளி கரையோரத்தில் மங்கூஸ் மரம் நடும் திட்டத்தை கடற்படையினர் மேற்கொண்டனர்.
08 Mar 2025
திஸ்ஸமஹாராம ரஜமஹா விகாரையில் ஆரம்பமான "உலக சமாதானத்திற்கான மைத்திரி பாத யாத்திரை" நாகதீப விகாரையை வந்தடைந்த்து

இலங்கை, தாய்லாந்து, மியான்மர் மற்றும் லாவோஸை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐம்பத்து இரண்டு (52) பௌத்த பிக்குகளின் பங்குபற்றுதலுடன், "உலக சமாதானத்திற்கான மைத்திரி பாத யாத்திரை" 2025 பெப்ரவரி 07 அன்று திஸ்ஸஹாராம ரஜமகா விகாரையில் இருந்து ஆரம்பமாகி இன்று (2025 மார்ச் 08) யாழ்ப்பாணம் நாகதீப ரஜமஹா விகாரையை சென்றடைந்ததுடன், கடற்படையின் பௌத்த சங்கத்தின் பங்களிப்புடன், இந்த பாத யாத்திரையில் வருகைத்தந்த பிக்குகள் மற்றும் ஏனையவர்களுக்கு தேவையான வசதிகளை கடற்படையினர் ஏற்பாடு செய்தனர்.
08 Mar 2025
ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு) இரண்டு 02 கின்னஸ் உலக சாதனைகளை படைப்பதற்காக நடைபயணத்தைத் ஆரம்பித்தார்

ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு) இயந்திரம் அல்லாத டிரெட்மில் இயந்திரத்தில் (Manual Treadmill) 24 மணிநேரம் தொடர்ந்து நடந்து இரண்டு (02) கின்னஸ் உலக சாதனைகளை படைப்பதற்காக இன்று 2025 மார்ச் 08 கடற்படை தலைமையகத்தில் 1500 மணி நேரத்தில், உலக சாதனைகளை அமைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ நிறுவனமான செரண்டிப் உலக சாதனை நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ் நடைப்பயணமானது ஆரம்பிக்கப்பட்டது.
08 Mar 2025
ரியர் அட்மிரல் துஷார உடுகம கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

ரியர் அட்மிரல் துஷார உடுகம இலங்கை கடற்படையில் 33 வருட கால சேவையை நிறைவு செய்து இன்று (2025 மார்ச் 07) இன்று கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
07 Mar 2025
திக்கோவிட்ட துறைமுகத்தில் கப்பல்களுக்கு பிரவேசித்தல், தேடுதல் மற்றும் கைப்பற்றும் நடைமுறைகள் பற்றிய செயல்விளக்கப் பயிற்சியானது இடம்பெற்றது

கடற்படையின் சிறப்புக் கப்பல் படையினால் Indian Ocean Rim Academic Group (IORAG) மற்றும் United Nations Office on Drugs and Crime (UNODC) ஆகியவற்றின் உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கப்பல்களுக்கு பிரவேசித்தல், தேடுதல் மற்றும் கைப்பற்றும் முறைகள் தொடர்பான செயல்விளக்கப் பயிற்சியானது 2025 மார்ச் 05 அன்று திக்கோவிட்ட துறைமுக வளாகத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
06 Mar 2025
இந்திய கடற்படைக் கப்பல் ‘INS KUTHAR’ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இலங்கையை விட்டு புறப்பட்டது

2025 மார்ச் 03 அன்று ‘INS KUTHAR’ தனது உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய கடற்படையின் ‘INS KUTHAR’ போர்க்கப்பலானது, இன்று (2025 மார்ச் 03) தீவை விட்டு வெளியேறுகிறது. மேலும் இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறையில் கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.
06 Mar 2025
பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான ‘PNS ASLAT’ கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இலங்கையை விட்டு புறப்பட்டது

2025 மார்ச் 05 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பலான 'PNS ASLAT' உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று (2025 மார்ச் 06) இலங்கை கடற்படை கப்பலான சமுதுரவுடன் கூட்டு கடற்படை பயிற்சியினை மேற்கொண்டதன் பின்னர் தீவை விட்டு வெளியேறியதுடன், குறித்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறையில் பிரியாவிடை அளித்தனர்.
06 Mar 2025
ஹொரோவ்பதானை மொரகேவ மகா வித்தியாலயத்தை கற்றலுக்கு உகந்த வளாகமாக திருத்துவதற்கு கடற்படையின் சமூக பணியின் பங்களிப்பு

"க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்துடன் இணைந்து பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்தல், உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் புனரமைத்தல் ஆகிய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் ஹொரோவ்பதானை மொரகேவ மகா வித்தியாலயத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 மார்ச் 04 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
06 Mar 2025