நிகழ்வு-செய்தி
வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் காலி அகலிய பாலத்தில் சிக்கிய குப்பைகளை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

காலி அகலிய பாலத்தில் சிக்கிக்கிடந்த குப்பைகள் மற்றும் மரத்துண்டுகள் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் 2020 மே 09 ஆம் திகதி கடற்படையினரால் அகற்றப்பட்டது.
10 May 2020
வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை, மலைமுந்தால் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் 2020 மே 09 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
10 May 2020
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் திட்டங்களுக்காக ராகம பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து கடற்படைக்கு முகமூடிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான பல முகமூடிகள் ராகம பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து இன்று (2020 மே 09) கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
09 May 2020
ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகளினால் கடற்படைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது

இலங்கை கடற்படை நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான சுடு நீர் போத்தல்கள் 10 வது கேடட் ஆட்சேர்ப்பின் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகளினால் இன்று (2020 மே 09) கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
09 May 2020
பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 14 நபர்கள் மையத்தை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 14 நபர்கள் 2020 மே 08 மற்றும் 09 திகதிகளில் மையத்தை விட்டு புறப்பட்டு சென்றனர்.
09 May 2020
கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதல் கடற்படை வீரர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்

கொரோனா வைரஸ் தொற்றுள்ளதாக முதலில் அடையாளம் காணப்பட்ட பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த கடற்படை வீரர் உட்பட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 05 கடற்படை வீரர்கள் பி.சி.ஆர் சோதனையின் பின் உடலில் குறித்த வைரஸ் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் 2020 மே 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
09 May 2020
வெசாக் தினத்தை (07) முன்னிட்டு கடற்படை முகாம்களில் விசேட பௌத்த மத வழிப்பாட்டு பிரார்த்தனைகள் இடம்பெற்றன

புத்தரின் மகத்தான வாழ்கையை நினைவு கூரும் வெசாக் தினத்தை (07) முன்னிட்டு கடற்படை முகாம்களில் விசேட பௌத்த மத வழிப்பாட்டு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. மேலும் உலகம் முழுவதும் பரவி வரும் கோவிட் -19 வைரஸ் தொற்று வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் கடற்படை வீரர்கள் உட்பட அனைத்து இலங்கையர்கள் மற்றும் முழு உலக மக்களுக்கும் விரைவாக குணமடைய இங்கு மத பிராத்தனைகளும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன.
08 May 2020
கோவிட் - 19 வைரஸ் தொற்றுக்கு இலக்கான 16 கடற்படை வீரர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர்

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மேலும் 02 கடற்படை வீரர்கள் 2020 மே 7 அன்று நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் உடலில் குறித்த வைரஸ் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர்.
08 May 2020
தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 118 நபர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லல்

கடற்படையினரால் நிருவகிக்கப்பட்டு வரும் சாம்பூர் (98) ஒலுவில் (20) தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 118 நபர்கள் இன்று 2020 மே 08 ஆம் திகதி தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
08 May 2020
சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை துறைமுகத்திற்கு வெளி கடல் பகுதியில் 2020 மே 07 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
08 May 2020