நிகழ்வு-செய்தி
கடற்படை சமூக நலத் திட்டத்தின் கீழ் மற்றொரு சமூக சேவை

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ‘மிதுரு மிதுரோ’ மறுவாழ்வு மையத்தின் நபர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கும் ஒரு திட்டத்தை இன்று (2020 ஏப்ரல் 04,) இலங்கை கடற்படை தனது சமூக நலத் திட்டத்தின் கீழ் மேற்கொண்டுள்ளது.
04 Apr 2020
பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த இரண்டாவது குழு புறப்பட்டது

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த இரண்டாவது குழுவினர் இன்று (2020 ஏப்ரல் 03) தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டனர்.
03 Apr 2020
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த றாகம வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் கடற்படை பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை நடத்திய திட்டங்களின் விரிவாக்கமாக, றாகம வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலை வளாகத்தில் கடந்த சில நாட்களில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
03 Apr 2020
மாட்டிறைச்சி கொண்ட இருவர் (02) மற்றும் ஊரடங்கு சட்டத்தை மீறிய இருவர் (02) கடற்படையால் கைது

34 கிலோ கிராம் மாட்டிறைச்சி கொண்ட இருவர் மற்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு சந்தேக நபர்கள் (02) ஆருகம்பை பகுதியில் மேற்கொள்ளபட்ட ரோந்துப் பயணத்தின் போது 2020 ஏப்ரல் 03 அன்று மூன்று சந்தர்ப்பங்களில் கடற்படையால் கைது செய்யப்பட்டது.
03 Apr 2020
மூத்த குடிமக்களுக்கு தனது ஓய்வூதியத்தைப் பெற கடற்படை ஆதரவு

தீவு முழுவதிலும் இயற்றப்பட்ட ஊரடங்குச் சட்டம் காரணமாக தனது ஓய்வூதியத்தைப் பெற போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருந்த மூத்த குடிமக்களுக்கு 2020 ஏப்ரல் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் கடற்படை தனது ஆதரவை வழங்கியுள்ளது.
03 Apr 2020
கடற்படை சமூக நலத் திட்டத்தின் கீழ் பல வைத்தியசாலைகளுக்கு கிருமிநாசினி அறைகள் வழங்கப்பட்டன.

கடற்படை சமூக நலத் திட்டத்தின் கீழ் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவினரால் உருவாக்கப்பட்ட கிருமிநாசினி அறைகள் 2020 ஏப்ரல் 02 ஆம் திகதி கலுபோவில போதனா வைத்தியசாலை, நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை ஆகியவற்றில் நிருவப்பட்டன.
03 Apr 2020
கடற்படை மேலும் பல கிருமி நீக்கும் செய்யும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது

நாட்டில் 'புதிய கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட பல கிருமி நீக்கும் திட்டங்கள் 2020 ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் 2 ஆம் திகதி வரை, புத்தலம் அடிப்படை வைத்தியசாலை, ரூபாவாஹினி கூட்டுத்தாபனம், நாரஹேன்பிட்ட மற்றும் கிருலபனை மக்கள் வங்கி வளாகங்கள், புத்தலம் சஹிரா முஸ்லிம் கல்லூரி ஆகிய பல இடங்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டது.
03 Apr 2020
கடற்படை மற்றும் காவல்துறையின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் கேரளா கஞ்சா மற்றும் ஹெராயின் ஆகியவற்றுடன் மூன்று பேர் (03) கைது செய்யப்பட்டனர்

கடற்படை காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து 2020 ஏப்ரல் 2 ஆம் திகதி, முள்ளிக்குளம் பகுதியில் மற்றும் புத்தலம், கரம்ப பகுதியில் மேற்கொண்டுள்ள இரண்டு நடவடிக்கைகளின் போது கேரளா கஞ்சா மற்றும் ஹெராயினுடன் மூன்று (03) நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
03 Apr 2020
Metallurgical Corporation of China LTD நிறுவனம் மூலம் கடற்படைக்கு பல சுகாதார உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக சீன மக்கள் குடியரசின் Metallurgical Corporation of China LTD நிறுவனம் இன்று (2020 ஏப்ரல் 02) பல சுகாதார உபகரணங்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து நன்கொடையாக வழங்கியது.
02 Apr 2020
கொரோனா நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்ற நபர்களை சோதனை செய்வதற்காக நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை கடற்படையால் புதுபிக்கப்பட்டது

இலங்கை கடற்படை இன்று (2020 ஏப்ரல் 2,) கொரோனா நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்ற நபர்களின் எச்சில் மற்றும் இரத்த மாதிரிகள் சோதனை செய்வதுற்கு தேவையான வசதிகள் கொண்ட ஒரு இடத்தை நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையில் தயாரித்தது.
02 Apr 2020