நிகழ்வு-செய்தி

கடற்படை வடக்கில் தீவுவாசி மக்களுக்கு நிவாரணம் அளிக்கிறது

இலங்கை கடற்படை இன்று (2020 மார்ச் 26,) யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள தீவுகளில் வாழும் மக்களுக்கு உலர் உணவு பொதிகள் விநியோகிக்கும் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது.

26 Mar 2020

றாகம பகுதியில் பல இடங்கள் மையமாக கொண்டு கடற்படை கிருமி நீக்கம் திட்டங்கள் மேற்கொண்டது.

புதிய கொரோனா வைரஸை நாட்டில் பரவாமல் தடுக்க இன்று (2020 மார்ச் 26) கடற்படை றாகம, வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் மற்றும் றாகம பொல்கஹஹேன இயேசு குழந்தை பாடசாலை ஆகியவற்றில் கிருமி நீக்கம் செய்யும் திட்டங்கள் மேற்கொண்டுள்ளது.

26 Mar 2020

போதைப்பொருளுடன் ஒரு சந்தேக நபர் கடற்படையால் கைது

கடற்படையால் இன்று (2020 மார்ச் 26) புத்தலம் எத்தாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்துப்பணியின் போது போதைப்பொருள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

26 Mar 2020

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் தொற்று நோய்கள் பிரிவை புதுப்பிக்க கடற்படை நடவடிக்கைகள் எடுத்துள்ளது

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் தொற்று நோய்கள் பிரிவை கடற்படையால் புதுப்பிக்கப்பட்டது.

26 Mar 2020

சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று கடற்படையினரினால் கைது

2020 மார்ச் 25 ஆம் திகதி ஜெயநகர் கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று கடற்படை கைப்பற்றியது.

26 Mar 2020

வெடிபொருட்களை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட சுமார் 30 கிலோ கிராம் மீன்களுடன் ஒரு படகு கடற்படையால் கைது

இலங்கை கடற்படை இன்று (2020 மார்ச் 25,) திருகோணமலை எரக்கண்டி கடற்கரையில் இருந்து கிட்டத்தட்ட 30 கிலோகிராம் மீன்களுடன் ஒரு படகு பறிமுதல் செய்தது.

25 Mar 2020

யாழ்ப்பாணம் பகுதியில் கடற்படை பல கிருமி நீக்கம் செய்யும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

நாட்டில் புதிய கொரோனா வைரஸை பரவாமல் தடுக்க இன்று (2020 மார்ச் 25) கடற்படை யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் கிருமி நீக்கம் செய்யும் திட்டங்கள் மேற்கொண்டுள்ளது.

25 Mar 2020

களுத்துறை மாவட்ட பொது மருத்துவமனையில் மற்றும் கொழும்பு துறைமுக மருத்துவ பிரிவில் கிருமி நீக்கம் செய்யும் திட்டமொன்று கடற்படையால் மேற்கொள்ளப்பட்டது

நாட்டில் புதிய கொரோனா வைரஸை பரவுவதைக் கட்டுப்படுத்த இன்று (2020 மார்ச் 25) கடற்படை களுத்துறை மாவட்ட பொது மருத்துவமனையில் மற்றும் கொழும்பு துறைமுக மருத்துவ பிரிவில் கிருமி நீக்கம் செய்யும் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது.

25 Mar 2020

பொன்னாலை சாலைத் தடையில் ஒரு இந்திய நாட்டவரும், கேரள கஞ்சா கொண்ட இரண்டு சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்

2020 மார்ச் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் பொன்னாலை சாலைத் தடையில் சந்தேகத்திற்கிடமான இரண்டு மோட்டார் சைக்கிளில்களை சோதனை செய்த போது ஒரு இந்தியர் மற்றும் கேரள கஞ்சா வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை கடற்படை கைது செய்தது.

25 Mar 2020

சதொச களஞ்சியசாலைகளில் உள்ள அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க கடற்படை உதவி

அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களிடையே விநியோகிக்க ஏற்பாடு செய்வதை குறித்து கடற்படை இன்று (2020 மார்ச் 25) உதவி வழங்கியது.

25 Mar 2020